Lokesh Kanagaraj: காட்டாளன் படத்தில் கேமியோ வேடத்தில் லோகேஷ் கனகராஜ் – போஸ்டரை பகிர்ந்த படக்குழு!
Lokesh Kanagaraj Cameo In Kattalan Movie: கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மலையாளம் சினிமாவில் உருவாகியுள்ள காட்டாளன் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்துள்ளார். அதன் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.
இயக்குநராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் தற்போது இயக்குநராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மாநகரம் (Maanagaram) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்த இவர், தற்போது நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்டுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் (Arun Matheswaran) இயக்கத்தில் டிசி (DC) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இதற்க்கு முன்னரே ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் சிறிய கேமியோ வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அந்த வகையில் தற்போது நடிப்பில் கவனம் செலுத்திவரும் இவர், மலையாளத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதையில் வெளியான காட்டாளன் (Kattalan) படத்தில் கேமியோ வேடத்தில் நடித்துள்ளார். இந்த காட்டாளன் படத்தில் ஹீரோவாக ஆண்டனி வர்கீஸ் (Antony Varghese) நடித்துள்ள நிலையில், இதில் தமிழ் நடிகை துஷார விஜயனும் (Dushara Vijayan) ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார்.
இப்படமானது இன்று 2026 மே 28ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. மேலும் இதில் இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜ் கேமியோ வேடத்தில் நடித்துள்ளார். இதில் அவர், “லியோ கேபிரியல்” என்ற முக்கிய கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ளாராம். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பசங்க 3 பண்ணனு ஆசை.. ஸ்கிரிப்ட் ரெடி – அப்டேட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!
லோகேஷ் கனகராஜ் கேமியோ வேடத்தில் நடித்த ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு:
@Dir_lokesh from the world of #Kattalan 🥵💥
Releasing on 1100+ Theatres Pan India#KattalanFromMay28th
🌎A Cubes International Initiative
💰Shareef Muhammed Presents,⭐️ing Antony Varghese , Suneel , Dushara Vijayan , Kabir duhan singh, Parth Tiwarii… pic.twitter.com/d9rM7vHsM0
— GS cinema International (@gs_cinema) May 28, 2026
காட்டாளன் படத்தை இயக்குநர் பவுல் ஜார்ஜ் இயக்க, ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சித்திக், சுனில், அன்சான் பவுல், காபிர் துன் சிங் மற்றும் பல்வேறு பிரபலன்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான மார்கோ திரைப்பட பின்னணி கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருப்பதாஹ்க் தெரிவிகிக்கப்படுகிறது. இப்படத்திற்கு பிரபல கன்னட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்த காட்டாளன் படமானது ஆக்ஷன், அதிரடி மற்றும் வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக வெளியாகியுள்ளதாம்.
இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இப்படம் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரையரங்கில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இதில் லோகேஷ் கனகராஜ் கேமியோ வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது மலையாளத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஒரு அறிமுக படமாகவும் அமைத்துள்ளது.