AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ப்ளாஸ்ட் முதல் கட்டாளன் வரை… இந்த வார சினிமாவின் புது வரவுகள் – லிஸ்ட் இதோ

This Week Theatre Releases Movies List Here | தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் இந்த மே மாத இறுதி வாரத்தில் என்னென்ன படங்கள் திரையரங்குகளில் புதிதாக வெளியாக உள்ளது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

ப்ளாஸ்ட் முதல் கட்டாளன் வரை… இந்த வார சினிமாவின் புது வரவுகள் – லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 May 2026 16:13 PM IST

ப்ளாஸ்ட் படம்: ஆக்‌ஷன் கிங் நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ப்ளாஸ்ட். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுபாஸ் கே ராஜ் எழுதி இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரால்  தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுனின் மகளாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் மனைவியாக அபிராமியும் நடித்து உள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இந்த நிலையில் படம் நாளை 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈகோ ராமன்: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி பிறகு பல வேடங்களில் நடித்தவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் சமீபத்தில் உடல் நலக் குறைவு காரனமாக உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன் நடித்த படங்கள் தற்போது தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வரிசையில் மறைந்த நடிகர் ரோபோ சங்கர் நடிப்பில் உருவான படம் தான் ஈகோ ராமன். இந்தப் படத்தில் நடிகர் சிபி சக்ரவர்த்தி நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கீர்த்தனா ஸ்ரீகுமார், முரளி, சேரன் ராஜ், கவிதா ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற 29-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கரக்கம் படம்: மலையாள சினிமாவில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கரக்கம். இந்தப் படத்தை இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியம் எழுதி இயக்கி உள்ளார். இதில் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஸ்ரீநாத் பாசி நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஃபெமினா ஜார்ஜ், பிரவீன் டிஜே, அபிராம், ஷான் ரோமி, சித்தார்த் பரதன், ஜீன் பால் லால், மிதுட்டி, பிஜுகுட்டன், மணிகண்டன் ஆச்சாரி, மனோஜ் மோசஸ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படம் நாளை 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அப்போ அரசன் படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரி முத்து உடன் கூட்டணி இல்லையா சிம்பு? வைரலாகும் தகவல்

கட்டாளன் படம்: மலையாள சினிமாவில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் கட்டாளன். இந்தப் படத்தினை இயக்குநர் பால் ஜார்ஜ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆண்டனி வர்கீஷ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் நாளை 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ரிலீஸ் தேதியை அறிவித்தது இதயம் முரளி டீம்… அதர்வா உடன் போஸ்டரில் ஃபகத் பாசில் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Follow Us