AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரிலீஸ் தேதியை அறிவித்தது இதயம் முரளி டீம்… அதர்வா உடன் போஸ்டரில் ஃபகத் பாசில் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Idhayam Murali Movie Release Update: நடிகர் அதர்வா முரளி நடிப்பில் உருவாகி தற்போது திரைஅய்ரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இதயம் முரளி. இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ரிலீஸ் தேதியை அறிவித்தது இதயம் முரளி டீம்… அதர்வா உடன் போஸ்டரில் ஃபகத் பாசில் – உற்சாகத்தில் ரசிகர்கள்
இதயம் முரளிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 May 2026 18:23 PM IST

தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் முரளியின் மகன் தான் நடிகர் அதர்வா முரளி. வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் தனது கடின உழைப்பின் காரணமாக அடுத்தடுத்தப் படங்களை தொடர்ந்து ஹிட் கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் அதர்வா முரளி நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் அதர்வா முரளி பராசக்தி படத்தில் நடித்து இருந்தார். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நாயகன் சிவகார்த்திகேயன் என்றாலும் அதர்வா முரளியின் கதாப்பாத்திரம் தான் கதையை நகர்த்தி செல்லும்.

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனின் தம்பியாக தமிழ் பற்றாளனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் அதர்வா முரளி. இந்தப் படத்தை தொடர்ந்து அதர்வா முரளி நாயகனாக நடிக்கும் படம் இதயம் முரளி. பராசக்தி படத்தை  தயாரித்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தான் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜூலை மாதம் வெளியாகிறது இதயம் முரளி படம்:

இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகர் ஃபகத் பாசில் சிறப்பு வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரீத்தி முகுந்தன், கயடு லோஹர், நட்டி நடராஜன், நிஹாரிகா என்.எம், ரக்ஷன், திராவிட் செல்வம், பிரக்யா நாக்ரா, சுதாகர் ஜெயராமன், ஏஞ்சலின் பி மற்றும்
யாஷஸ்ரீ ராவ் என பலர் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூலை மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… உங்கள் கருணையாலும் பாசத்தாலும் என்னை நெகிழச் செய்ததற்கு நன்றிகள் – ரசிகர்களுக்காக நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட கார்த்தி

இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சினிமாவில் 25 வருடங்களை கடந்த லிங்குசாமி… கொண்டாடிய பிரபல இயக்குநர்கள்

Follow Us