ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது கர படக்குழு… எங்கு எப்போது தெரியுமா?
Kara Movie Will Be Released On Netflix OTT | நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கர. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இந்தி தெலுங்கு, இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி இருந்தார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த கர படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து இருந்தார். மமிதா பைஜுவின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களுக்கும் இந்த படத்திற்கும் நிறைய வித்யாசம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டிராஜ் மற்றும் கருணாஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.




நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர படம்:
இந்த கர படம் கடந்த 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் மக்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் ஹிட் அடித்த கர படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… Sanjana Krishnamoorthy: டிசி திரைப்படம் ஒரு வித்தியாசமான உலகம் – நடிகை சஞ்சனா பகிர்ந்த தகவல்!
கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Indha vaati thirudradhu, neethi kaga. Karasaamy oda neethi 🔥🔥 pic.twitter.com/OS80ujhddL
— Netflix India South (@Netflix_INSouth) May 25, 2026
Also Read… தலைவர் 173 படத்தில் இருந்து விலகிய சிபி சக்ரவர்த்தியின் அடுத்த ப்ளான் என்ன?