AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தலைவர் 173 படத்தில் இருந்து விலகிய சிபி சக்ரவர்த்தியின் அடுத்த ப்ளான் என்ன?

Director Cibi Chakaravarthi Next Movie Update | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 173 படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு அந்தப் படத்தில் இருந்து விலகிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி அடுத்ததாக எந்த நடிகரை இயக்க உள்ளார் என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைவர் 173 படத்தில் இருந்து விலகிய சிபி சக்ரவர்த்தியின் அடுத்த ப்ளான் என்ன?
சிபி சக்ரவர்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 May 2026 17:18 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் பேசப்பட்ட பெயர் சிபி சக்ரவர்த்தி. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமனார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு அவர் எந்தப் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்தார் சிபி சக்ரவர்த்தி. மேலும் தமிழ் திரையுலக மக்களே இவரது பெயரை மறந்து போன நிலையில் தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதாக அறிவித்த பிறகு அந்தப் படத்தை சிபி சக்ரவர்த்தி தான் இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதன்படி இவர்தான் தலைவர் 173 படத்தை கமல் ஹாசன் தயாரிப்பில் கீழ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கி நடைப்பெற்றது. இப்படி இருக்கும் நிலையில் தெலுங்கு சினிமாவில் அவர் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பிறகு அது பாதியிலேயே நின்ற காரணத்தால் அந்தப் படத்திற்கான தொகையை சிபி சக்ரவர்த்தி கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் மீது வழக்கு பதியப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சிக்கல் நீண்டு கொண்டே சென்றதைத் தொடர்ந்து அவர் தலைவர் 173 படத்தில் இருந்து விலகினார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்கள் இதுவரை வெளியாகவில்லை.

இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த ப்ளான் என்ன?

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகின்ற இந்த நிலையில் தற்போது அவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் தனது அடுத்த திரைப்படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… இயக்குநர் அமீர் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கவினுக்கு ஜோடியாகும் லப்பர் பந்து பட நடிகை.. எந்த படத்தில் தெரியுமா?

Follow Us