AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா – ஜோதிகா பசங்க எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க… இணையத்தில் வைரலாகும் கியூட் ஃபேமிலி வீடியோ

Suriya and Jyothikas Cute Family Video | நட்சத்திர தம்பதிகளாக ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருபவர்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் தங்களது பிள்ளைகளுடன் சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

சூர்யா – ஜோதிகா பசங்க எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க… இணையத்தில் வைரலாகும் கியூட் ஃபேமிலி வீடியோ
மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் நடிகர்கள் சூர்யா - ஜோதிகா தம்பதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 May 2026 11:33 AM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் ஒன்றாக நடிக்கும் நடிகர்கள் தொடர்ந்து காதலித்து திருமணம் செய்துக்கொள்வது காலம் காலமாக நடந்து வருகின்றது. ஆனால் அந்த திருமண பந்தத்தில் எத்தனைபேர் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறார்கள் என்று யோசித்தார் அது குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது. பிரபலங்கள் மட்டும் இன்றி ரசிகர்களும் இந்த மாதிரியான ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்று ஆண் பெண் இருவரும் ஆசைப்படும் அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியான ஜோடியாக மட்டும் இன்றி புரிதல் அதிகம் உள்ள ஜோடியாக வலம் வருகிறார்கள் நடிகர்கள் சூர்யா – ஜோதிகா தம்பதி. தமிழ் சினிமாவில் நாயகன் நாயகியான இவர்கள் இருவரும் ஒன்றாக படத்தில் நடிக்கும் போது காதல் ஏற்பட்டு பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்துக் கொண்டனர்.

கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். வருகின்ற செப்டம்பர் மாதம் வந்தால் இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் மட்டும் இன்றி நிஜ வாழ்கையிலும் காதலை பொழிந்துகொள்ளும் இவர்களை பார்க்கும் ரசிகர்கள் இப்படி ஒரு திருமண வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இந்த சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் சூர்யா – ஜோதிகாவின் கியூட் ஃபேமிலி வீடியோ:

அளவான குடும்பம் அழகான வாழ்க்கை என வாழ்ந்து வரும் சூர்யா – ஜோதிகா தம்பதி சமீபத்தில் ஒரு பட விழாவில் தங்களது மகன் மற்றும் மகள் உடன் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் சூர்யா – ஜோதிகா தம்பதியின் பிள்ளைகள் இவ்வளவு பெருசாக வளர்ந்துவிட்டார்களா என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு அதிக அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஜோதிகா சமீப காலமாக படம் மற்றும் இணையதள தொடர்களில் அதிக அளவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான சிஸ்டம் என்ற படத்தின் விழாவில் தான் அவர் குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு அந்த பிரபலத்துடன் திருமணமா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Atlee: ஒரு முழுமையான மாஸ் கமர்ஷியல் பிளாக்பஸ்ட்.. கருப்பு படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

Follow Us