இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு அந்த பிரபலத்துடன் திருமணமா? வைரலாகும் தகவல்
Anirudh Ravichander Marriage Information Viral On Social Media: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர் அனிருத் ரவிச்சந்தர். இவரது திருமணம் தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் 3. இந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய சினிமா ரசிகர்களிடையே முதல் படத்திலேயே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் வெளியான படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், தளபதி விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இது மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் உள்ள பிரபலங்களின் படங்களுக்கும் தற்போது தொடர்ந்து இசையமைத்து வருகிறார் அனிருத் ரவிச்சந்தர். இந்த நிலையில் தொடர்ந்து படங்கள் மற்றும் இசை குறித்து செய்திகளில் இடம்பெரும் அனிருத் ரவிச்சந்தர் கடந்த சில நாட்களாக காதல், டேட்டிங் மற்றும் திருமணம் தொடர்பான செய்திகளிலும் இடம் பிடித்து வருகிறார்.




தயாரிப்பாளர் கலாநிதிமாறனின் மகளை கரம் பிடிக்கும் அனிருத் ரவிச்சந்தர்?
தமிழ் சினிமாவில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். நீண்ட காலமாகப் பரவி வந்த வதந்திகள் இறுதியாக உண்மையாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு குடும்பங்களுக்கும் நெருக்கமான வட்டாரங்கள், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… ரீல் டு ரியல்! கோட் பட நம்பர் பிளேட்டை முதல்வர் விஜய்க்கு பரிசளித்த வெங்கட் பிரபு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The long-standing rumors are finally coming true! Anirudh Ravichander and Kavya Maran are reportedly tying the knot later this year. Sources close to both families confirm an official announcement is dropping very soon! 💍#Anirudh #KavyaMaran pic.twitter.com/d2KrbV4MUi
— Cinetrends (@Cinetrendssk) May 21, 2026