AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Salman Khan: சல்மான்கானின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு.. அடுத்து நடந்தது என்ன?

Salman Khan Mumbai Galaxy Apartment: பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருந்துவருபவர் சல்மான்கான். இவர் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்த அசத்திவருகிறார். இவர் மும்பையில் கேலக்ஸி அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். அந்த வகையில், அவரின் வீட்டிற்குள் பாம்பு புகுந்ததால். அதன் பிறகு நடந்தது என்ன என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Salman Khan: சல்மான்கானின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு.. அடுத்து நடந்தது என்ன?
சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த பாம்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 May 2026 13:35 PM IST

இந்தி சினிமாவில் புகப்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சல்மான்கான் (Salman Khan). இவர் தொடர்ந்து இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஹீரோவாக பல ஹிட் படங்ககளை கொடுத்த இவர், 60வது வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். இவர் பிரபல நடிகை ஒருவரை காதலித்த நிலையில், அதையடுத்து இவர் திருமணமே செய்யவில்லை என கூறப்படுகிறது. இவர் மும்பையில் உள்ள தனக்கு சொந்தமான கேலக்ஸி அடுக்குமாடிக் குடியிருப்பில், (Mumbai Galaxy Apartment) தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். சினிமாவில் எவ்வளவு பெரிய ஹீரோ என்றாலும், தற்போதும் தனது குடும்பத்துடன் ஒன்றாக வசித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாளும், நடிகர் சல்மான்கானை ஒருமுறை காணும் வாய்ப்புக்காக ஏராளமான ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு வெளியே கூடுகிறார்கள். அந்த வகையில் கடந்த 2026 மே 18ம் தேதியில், சல்மான்கானின் வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டதாம். இது அங்கு அவரின் குடும்பத்தின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க: ரீல் டு ரியல்! கோட் பட நம்பர் பிளேட்டை முதல்வர் விஜய்க்கு பரிசளித்த வெங்கட் பிரபு!

சல்மான்கான் வீட்டிற்குள் புகுந்த பாம்பு நடந்தது என்ன:

மும்பையில் மே 18ம் தேதி திங்களன்று சல்மான்கானின் குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு புகுந்திருந்தது. வீட்டின் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக ஒரு பாம்பு பிடிப்பவரைத் தொடர்புகொண்டு நிலைமையைச் சமாளிக்க உதவினர். பாம்பைக் கவனமாகக் கையாள்வதில் அந்தப் பிடிப்பவருக்கு ஆதரவளிக்க மும்பை காவல்துறையும் அங்கு வந்தது. பாம்பு பிடிப்பவர் பாம்பைத் திறமையாகக் கையாண்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பல காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: தொடர்ந்து அடுத்தடுத்த சர்ப்ரைஸை ரசிகர்களுக்கு கொடுத்த கருப்பு படக்குழு.. தி ஒன் சூர்யாவின் கருப்பு பட இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சல்மான் கான் தனது பெற்றோருடன் வசிக்கும் நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கீழே பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்தப் பிடிப்பவர் அதைக் கையால் பிடித்துள்ளார். அதிகாரிகள் அகற்றுவதற்காக அவர் அந்தப் பாம்பை ஒரு பையில் பத்திரப்படுத்தினார். அந்தப் பாம்பு விஷமற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிமை குறித்து நடிகர் சல்மான்கான் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகர் சல்மான்கான் தற்போது இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் புது படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துவருகிறார். இப்படம் ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

Follow Us