சல்மான்கான் – நயன்தாராவின் படத்தில் வில்லன் வேடத்தில் இரு நடிகர்கள்.. யார் யார் தெரியுமா?
Salman Khans SVC63 Movie: பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் சல்மான்கான். இவர் தற்போது வாரிசு பட இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இதில் நயன்தாரா நாயகியாக நடித்துவரும் நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தி சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நாயகனாக இருந்துவருபவர் சல்மான்கான் (Salman Khan). இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் சிக்கந்தர் (Sikandar) என்ற படமானது வெளியானது. இதை தமிழ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த நிலையில், ராஷ்மிகா (Rashmika), காஜல் அகர்வால் (Kajal Aggarwal) போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2025ம் ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியில் முடிந்தது. அந்த வகையில் இப்படத்திற்கு பெரிதாக சல்மான்கான் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை, அந்த வகையில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) வாரிசு (Varisu) படத்தை இயக்கியிருந்த இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி (Vamshi Paidipally) இயக்கத்தில், SVC63 என்ற படத்தில் நடித்துவருகிறார்.
இதில் சல்மான்கான் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா (Nayanthara) நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2026 ஏப்ரல் இறுதியில் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இப்படத்தை இரு வில்லன்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் எப்படி இருக்கும்? வைரலாகும் வீடியோ
சல்மான்கான் – நயன்தாராவின் SVC63 படத்தின் வில்லன் நடிகர்கள் யார்:
இந்த SVC63 திரைப்படமானது ஒரு பேமிலி டிராப் கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இதில் சல்மான்கான், குடும்பத்திற்காக அடங்கியிருக்கும் ஒரு கேங்ஸ்டராக நடித்துவருகிறாராம். அந்த வகையில் இப்படத்தில் இரு வில்லன்கள் இருக்கிறார்களாம். அதற்காக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் துரந்தர் படத்தின் மூலம் பிரபலமான அக்ஷய் கன்னா ஒன்றாக நடிகர்களை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகிறதாம். மேலும் வில்லனாக தமிழ் நடிகர் அரவிந்த் சுவாமியிடமும் பேச்சுவார்த்தைகளை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன ஜன நாயகன் படக்குழு… வைரலாகும் போஸ்ட்!
சல்மான்கான் மற்றும் நயன்தாராவின் SVC63 படத்தின் வில்லன் குறித்த பதிவு:
#SalmanKhan’s next big actioner SVC63 is shaping up fast! 🔥
Director Vamshi Paidipally has wrapped the first schedule, and the team is heading to Manali for the next leg. While Salman Khan and #Nayanthara lead the film, all eyes are now on one major casting decision — the… pic.twitter.com/nDlU7HiKwf
— Movie_Reviews (@MovieReview_Hub) May 5, 2026
சல்மான்கானின் SVC63 படத்தின் ரிலீஸ் எப்போது:
சல்மான்கானின் இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், முதற்கட்ட படப்பிடிப்புகளை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறதாம். இப்படமானது சுமார் ரூ 300 கோடி பட்ஜெட்டில் தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2027ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.