மும்பையில் தொடங்கியது சல்மான் கான் – வம்சி பைடிபைலி படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் வீடியோ
SalmanKhan and Vamshi Paidipally Movie Update: பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் தனது அடுத்தப் படத்திற்காகவும் தென்னிந்திய சினிமா இயக்குநருடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் பாலிவுட் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி பாலிவுட் சினிமாவில் 1988-ம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் சல்மான் கான். இவர் தொடர்ந்து இந்தி சினிமாவில் படங்களை நடித்து வந்தாலும் அடுத்தடுத்து இந்தி சினிமாவில் உள்ள இயக்குநர்களின் இயக்கத்தில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள இயக்குநர்களின் இயக்கத்திலும் நடித்து உள்ளார். அதன்படி நடிகர் சல்மான் கான் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான சிக்கந்தர் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் பல சிக்கல்களுக்கு இடையே எடுக்கப்பட்ட காரணத்தால் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியது இணையத்தில் வைரலானது.
இப்படி இருக்கும் சூழலில் அடுத்ததாக நடிகர் சல்மான் கான் எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்த நிலையில் அவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ள இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




தொடங்கியது சல்மான் கான் – வம்சி பைடிபைலி படத்தின் ஷூட்டிங்:
மேலும் இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக படக்குழு தற்போது வீடியோ வெளியிட்டு அறிவித்து உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Thalaivar 173: ரஜினிகாந்த் – சிபி சக்ரவர்த்தி கூட்டணி கைவிடப்பட இதுதான் காரணமா?
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
With auspicious beginnings and a vibrant atmosphere… this is how we began the #SalmanKhanVamshiPaidipallyFilm in Mumbai 🔥
On a Mission to bring you the Best of Entertainment ❤️
▶️ https://t.co/9KhibfEOsE#SVC63 @BeingSalmanKhan #Nayanthara @directorvamshi #DilRaju #Shirish… pic.twitter.com/8eKQp2cijz
— Sri Venkateswara Creations (@SVC_official) April 22, 2026
Also Read… பைக்கர் படம் இதுவரை வசூலித்தது இவ்வளவா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு