AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thalaivar 173: ரஜினிகாந்த் – சிபி சக்ரவர்த்தி கூட்டணி கைவிடப்பட இதுதான் காரணமா?

Rajinikanth Thalaivar 173 Movie Script Rejection : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பிலும், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது அப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதன் காரணம் பற்றி பார்க்கலாம்.

Thalaivar 173: ரஜினிகாந்த் – சிபி சக்ரவர்த்தி கூட்டணி கைவிடப்பட இதுதான் காரணமா?
ரஜினிகாந்த் - சிபி சக்ரவர்த்திImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Apr 2026 16:11 PM IST

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில், மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 171 படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் 172வது திரைப்படமாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில், ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கானது சிறப்பாக நிறைவடைந்தது என்றே கூறலாம். அந்த விதத்தில் இவர் இதைத்தடுக்க கமல்ஹாசனின் (Kamal Haasan) தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. இப்படமானது தற்காலிகமாக தலைவர் 173 (Thalaivar 173) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலில் சுந்தர் சி (Sundar C) இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

பின் அவர் சில காரணங்களால் வெளியேரிய நிலையில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி (Cibi Chakaravarthi) இயக்குவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ரஜினிகாந்த், சிபி சக்கரவர்த்தியின் படத்தின் கதையையும் நிராகரித்தாக காரணங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அலப்பறை கிளப்புறோம்… தலைவரு நிரந்தரம்… ஷூட்டிங்கை நிறைவு செய்தது ஜெயிலர் 2 படக்குழு

ரஜினிகாந்த் – சிபி சக்கரவர்த்தி படம் கைவிட காரணம் :

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, ரஜினியின் கலைவர் 173 படத்தை இயக்குவதாக படக்குழு அறிவித்திருந்தது. இதன் அறிவிப்பு வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவந்தது. இப்படத்தின் கதையை மேம்படுத்தும் பணியில் சிபி சக்கரவர்த்தி ஈடுபட்டார். அந்த வளர்ச்சியடைந்த கதையை ரஜினிகாந்திடம் சொன்னபோது, அவர் ஏமாற்றமடைந்ததாக கூறப்படுகிறது. எந்த படத்திலும் கதைதான் முக்கியம் என சிபி சக்கரவர்த்தியிடம் ரஜினிகாந்த் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ராக்கா படத்தின் இசையில் அட்லி அண்ணா தெளிவாக இருந்தார் – இசையமைப்பாளர் சாய் அபயங்கர்

மேலும் இப்படத்தில் சிபி சக்கரவர்த்தி, இயக்குநர் எஸ்.சங்கரை வில்லனாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தாராம். அவரும் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அஸ்வத் மாரிமுத்து மற்றும் வேறொரு இயக்குநரும் தலைவர் 173 படத்திற்காக பேசப்பட்டுவருகிறார்களாம். மேலுழு கதையை பார்த்தவுடன் ரஜினி யாரை முடிவு செய்கிறாரோ அவரே தலைவர் 173 படத்தின் இயக்குநராக இருப்பார் என கூறப்படுகிறது.

தலைவர் 173 படம் குறித்து வைரலாகும் பதிவு:

தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கை ரஜினிகாந்த் முடித்த நிலையில், அடுத்ததாக தலைவர் 173 படத்தில்தான் இணைவார் என கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இதன் இயக்குநர் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us