AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒம் படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை… உறுதி செய்த படக்குழு!

There is no change in OM movie release date | தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் ஓம் படத்தின் ரிலீஸ் உறுதி செய்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒம் படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை… உறுதி செய்த படக்குழு!
ஒம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jul 2026 16:29 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக கர படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ஓம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகின்றது.இந்தப் படத்தில் பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகர்களாக வலம் வரும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படம் அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதன்படி ஓம் திரைப்படம் முதலில் ஆயுத பூஜை வார இறுதியில், அக்டோபர் 16 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், அக்டோபர் 15 அன்று ஜெயிலர் 2 படத்தின் வருகை திடீரென அறிவிக்கப்பட்டதால், படக்குழுவினர் தற்போது இப்படத்தை தீபாவளிக்கு மாற்ற முயற்சித்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியானது.

ஒம் படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை:

இந்த நிலையில் இந்த குழப்பம் சினிமா வட்டாரங்களில் நிலவி வந்த நிலையில் நேற்று ஓம் படத்தின் முதல் சிங்கிளின் புரோமோ வீடியோவை வெளியிட்டனர். அந்த அலாக்கா லூவா சிங்கிள் புரோமோ வீடியோவின் இறுதியில் படம் அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக படம் நிச்சயமாக குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… 8 ஆண்டுகளைக் கடந்தது விஜய் சேதுபதி ட்ரிபிள் ஆக்‌ஷனில் நடித்த ஜுங்கா படம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா சாருடன் போட்டியா? ஹாய் பட ரிலீஸ் குறித்து மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு எடவன்!

Follow Us