8 ஆண்டுகளைக் கடந்தது விஜய் சேதுபதி ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்த ஜுங்கா படம்
Vijay Sethupathis Junga Movie Completes 8 Years Today | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த ஜுங்கா படம் தற்போது 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 27-ம் தேதி ஜூலை மாதம் 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஜுங்கா. இயக்குநர் கோகுல் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஆக்ஷன் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்து இருந்தார். இதுதான் அவர் ட்ரிபிள் ஆக்ஷனின் நடித்த முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாயிஷா, சுரேஷ் சந்திர மேனன், யோகி பாபு, ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், ராதா ரவி, டெல்லி கணேஷ், விஜயா பட்டி, வினோத் முன்னா, கேபிஒய் பாலா, சையத், ஷெல்ஃபா, அன்னே ப்ரூஜ், லூனா, சாப்ளின் பாலு, மடோனா செபாஸ்டியன், கோகுல், ஸ்ரீதர், ஜானி, பூபதி மற்றும் எம்சி ஜெஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.




8 ஆண்டுகளைக் கடந்தது விஜய் சேதுபதியின் ஜுங்கா படம்:
இந்த ஜுங்கா படத்தை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ், ஏ & பி குரூப்ஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதி, அருண் பாண்டியன், ஐசரி கே. கணேஷ் மற்றும் ஆர்.எம்.ராஜேஷ் குமார் ஆகியோர் தயாரித்து இருந்தனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மூன்று தலைமுறையாக டானாக இருக்கிறார். அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது டானாக இருப்பதனால் அவரை என்கவுண்டர் செய்ய நடக்கும் சதி என அனைத்தையும் இந்தப் படத்தில் காட்டியுள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கருப்பு பட கதையை சூர்யா சார் சொல்லும் போது மிகவும் பிடித்தது – இயக்குநர் வெங்கி அட்லூரி
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Celebrating 8 Years of #Junga! 🔥
Makkal Selvan @VijaySethuOffl delivered a thoroughly entertaining action-comedy with #Junga, bringing together humor, style, and memorable moments that still make it a fun watch.#8YearsOfJunga@sayyeshaa @MadonnaSebast14 @DirectorGokul… pic.twitter.com/jnnlYPZKHe
— UV Communications (@UVCommunication) July 27, 2026
Also Read… Wamiqa Gabbi: லோகேஷ் கனகராஜின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகை – வாமிகா கபி!