AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எனது படங்களில் வலிமை தான் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது – இயக்குநர் எச். வினோத்

Director H Vinoth talks about Valimai movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் எச். வினோத். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

எனது படங்களில் வலிமை தான் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது – இயக்குநர் எச். வினோத்
வலிமைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2026 09:00 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் எச் வினோத். இவர் தான் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் இயக்குநராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகம் ஆன இயக்குநர் எச் வினோத் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற படமும் மூன்றாவதாக வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படமும் அடுத்தடுத்து வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து ஹார்ட்ரிக் வெற்றியைப் பெற்ற இயக்குநர் எச் வினோத் 4-வதாக இயக்கிய படத்தில் படு தோல்வியை சந்தித்தார். இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். பெரிய பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்தப் படம் படு தோல்வியை சந்தித்தது படக்குழுவினருக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் எச் வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வலிமை தான் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது:

எனது அனைத்துப் படங்களிலும் வலிமை படம்தான் மிகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. இப்படத்தை உருவாக்கும்போது, ​​விசுவாசம் படத்தை நாங்கள் ஒரு முன்மாதிரியாகக் கொண்டோம். வலிமைக்கு முன்பே வெளியான விசுவாசம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அக்காலகட்டத்தில் அஜித் சார் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்திருந்தது.

விசுவாசம் போன்ற ஒரு படத்தை என்னால் உருவாக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அத்தகைய பாணி எனது படைப்பாற்றல் களத்திற்குள் அடங்காதது. இருப்பினும், அஜித் சார் படத்தை இயக்கும்போது, ​​அது வணிக ரீதியாகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும், அதே வேளையில் விசுவாசம் படத்திற்குப் பிறகு மீண்டும் வரத் தொடங்கியிருந்த குடும்பப் பார்வையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம் என்றும் எச். வினோத் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜன நாயகன் படத்தில் பிரகாஷ் ராஜின் கேரக்டர் அந்த நடிகர் நடிக்க வேண்டியது – இயக்குநர் சொன்ன விசயம்

இணையத்தில் வைரலாகும் எச். வினோத் பேச்சு:

Also Read… தனுஷின் ஓம் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Follow Us