தனுஷின் ஓம் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
Actor Dhanush's OM movie first single release update here | நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஓம். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். வாரிசு நடிகர்களாக சினிமாவில் அறிமுகம் ஆகும் பலருக்கு வாய்ப்பு என்பது எளிதாக கிடைத்தாலும் அவர்கள் தங்களை சினிமாவில் நிலைநிறுத்திக்கொள்வது என்பது அவர்களின் கடின உழைப்பிலேயே உள்ளது. அப்படி வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து நெகட்டிவான விமர்சனங்களையே அதிக அளவில் பெற்றார். அந்த நெகட்டிவ் விமர்சனங்களை பாசிட்டிவாக மாற்றி தன்னை உச்ச நடிகர்களில் ஒருவாக நிலைநிறுத்திக் கொண்டதில் தனுஷின் கடின உழைப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தன்னை தவறாக பேசியவர்களையும் பாசிட்டிவாக பேச வைக்க நடிகர் தனுஷ் சினிமாவில் பல உயரங்களைத் தொட்டார். தொடர்ந்து பல ஹிட் படங்களையும் கொடுத்தார்.
தமிழ் மொழியில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தனுஷிற்கு தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




தனுஷின் ஓம் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது?
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஓம் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி வருகின்ற 28-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் தனுஷ் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அன்று தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… அனிருத் முதல் மமிதா பைஜூ வரை… ஜன நாயகன் படத்தின் FDFS-வை கண்டுகளித்த பிரபலங்கள்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
CONFIRMED: #OM First Single is arriving on @dhanushkraja‘s Birthday(July 28) – A MASS DANCE number featuring both #Dhanush & @mammukka.
A full fledged dance number for Dhanush after ‘Rakita Rakita.’ This song will be one of the best from ISAI ABHYANKAR
Announcement loading 🔥🔥 pic.twitter.com/S854g9kP3P
— VɑɑTHI ツ (@Dharun__Offl) July 23, 2026
Also Read… ரவி மோகனின் புதுப் பட நாயகி இவரா? வைரலாகும் தகவல்