கோர்ட் ரூம் ட்ராமா பிடிக்குமா உங்களுக்கு? அப்போ இந்தி சினிமாவில் வெளியான இந்த இக்கா படத்தை மிஸ் செய்யாதீர்கள்!
Court Room Drama IKKA Movie OTT Review Here | இந்தி சினிமாவில் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் இக்கா. கோர்ட் ரூம் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
இந்தி சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் சித்தார்த் பி. மல்ஹோத்ரா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியான படம் இக்கா. இந்தி மொழியில் கோர்ட் ரூம் ட்ராமா பாணியில் லீகல் த்ரில்லராக வெளியான இந்த இக்கா படம் ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சன்னி தியோல் நாயகனாக நடித்து உள்ளார். இவருக்கு எதிர் கதாப்பாத்திரத்தில் நடிகர் அக்ஷய் வினோத் கண்ணா நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
அதன்படி நடிகர்கள் தியா மிர்சா, தில்லோடமா ஷோம், சஞ்சீதா ஷேக், டாரியா பேடி, ஷிஷிர் சர்மா, விஜய் விக்ரம் சிங், ஜோதி முகர்ஜி, அகன்ஷா ரஞ்சன் கபூர், இவான் ரோட்ரிக்ஸ், குரீந்தர் சிங் பவார், நயன் ஜாதவ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை அல்கெமி ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் சப்னா மல்ஹோத்ரா மற்றும் சித்தார்த் பி. மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.
இந்தி சினிமாவில் வெளியான இக்கா படத்தின் கதை என்ன?
இந்தப் படத்தில் நாயகனான சன்னி தியோல் ஒரு பிரபல வழக்கறிஞராக இருக்கிறார். இவர் ஒரு வழக்கை எழுத்து நடத்தினால் அவரது தரப்பு கட்சிக்காரர் நிச்சயமாக நிரபராதியாகதான் இருப்பார். மேலும் அவர் நியாத்தின் பக்கமே நிற்கும் ஒரு வழக்கறிஞராக இருக்கிறார். மிகவும் பிரபலமான வழக்கறிஞரான அவரது மகள் பள்ளியில் நீச்சல் வீராங்கனையாக இருக்கிறார். அவர் நீச்சல் போட்டியில் போது மூக்கில் இருந்து ரத்தம் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.




அப்படி அனுமதித்த போது அவருக்கு கேன்சர் இருப்பதாக தெரியவருகிறது. சன்னி தியோல் அவரது மனைவி இருவரும் ரத்த பரிசோதை செய்த போது அது சன்னி தியோல் மகள் இல்லை என்பது தெரியவருகிறது. பிறகுதான் சன்னி தியோல் மனைவி மற்றும் அவரது காதலன் அக்ஷய் கண்ணாவிற்கு பிறந்த பெண் தான் அவர் என்பதை விரிவிக்கிறது கதை.
Also Read… Aishwarya Lekshmi: ரூ100 கோடி கொடுத்தாலும் அதை செய்யவே மாட்டேன் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி!
ஆனால் சன்னி தியோலுக்கு அந்த பெண் குழந்தை மீது பாசம் அதிகம். அவருக்கு மருத்துவ உதவிக்கு அக்ஷய் கண்ணாவின் போன் மாரோ தேவைப்படுகிறது. அந்த சமயத்தில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமைப்படுத்திய வழ்க்கில் அக்ஷய் கண்ணா சிக்கி இருக்கிறார். முதலில் அந்த வழக்கை வாதாட மறுத்த சன்னி தியோல் பிறகு தனது மகளுக்கு அக்ஷய் கண்ணாவின் போன் மாரோ தேவைப்படுவதால் அதனை ஏற்றுக் கொள்கிறார். இறுதியில் அவர் நியாத்தின் பக்கத்தில் இருந்து வெளியேறினாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… பகவந்த் கேசரி படம் விஜய் சாருக்கு பிடிக்க இதுதான் காரணம் – இயக்குநர் ஹெச். வினோத்