AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் எப்போது? – தேதியுடன் வெளியான டீசர்!

Yezhu Kadal Yezhu Malai Release Date Teaser: இயக்குநர் ராம் இயக்கத்தில், நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் புதிய திரைப்படம்தான் ஏழு கடல் ஏழு வானம். இப்படமானது சிறப்பான பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசர் வெளியாகியுள்ளது.

நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் எப்போது? – தேதியுடன் வெளியான டீசர்!
ஏழு கடல் ஏழு மலை டீசர்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Jul 2026 20:42 PM IST

மலையாள சினிமாவில் இருக்க நடிகர்களில் ஒருவராக ஹிட் படங்கள் கொடுத்துவருபவர் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியவருகிறது. அந்த விதத்தில், இவரின் நடிப்பில் தமிழில் ஏற்கனவே உருவாகிவந்த படம்தான் ஏழு கடல் ஏழு மலை (Yezhu Kadal Yezhu Malai). இதை இயக்குநர் ராம் (Director Ram) இயக்கியிருந்த நிலையில், நிவின் பாலி நாயகனாக நடித்திருந்தார். இதில் அவருடன் நடிகை அஞ்சலி (Anjali) மற்றும் சூரி (Soori) போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமான்மத்து ட்ரெயினில் நடக்கும் ஒரு கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் நிவின் பாலி வெளியிட்ட இந்த டீசர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜூலை 23-ம் தேதி வெளியாகும் ஜன நாயகன்… தளபதி விஜய் வெளியிட்ட மாஸ் வீடியோ

ராமின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் எப்போது:

இப்படமானது காதல், பேண்டஸி மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. இதில் அவர் மாயாஜால பெண்ணாக ன்மடித்திருப்பதாக தெரிகிறது. இதில் சூரி சாதாரண மனிதனாகவும், நிவின் பாலி இம்மார்ட்டல் தநபராகவும் மற்றும் அஜினலி மேஜிக்கல் பெண்ணாகவும் நடித்துள்ளாராம். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசர் இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நிவின் பாலியின் புது திரைப்படங்கள்:

நிவின் பாலி மலையாளத்தில் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் பென்ஸ் படத்தில், வால்டர் என்ற நெகட்டிவ் வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து மலையாளத்தில் பிரேமலு பட இயக்குனரின் இயக்கத்தில், பேத்தலகேம் குடும்ப யூனிட் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: விஜய் சார்தான் பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்யச் சொன்னார் – எச்.வினோத் ஓபன் டாக்!

இப்படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் விஜயம் என்ற ரேஸ் படத்திலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது காதல், ரேஸிங் போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us