H Vinoth: விஜய் சார்தான் பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்யச் சொன்னார் – எச்.வினோத் ஓபன் டாக்!
H Vinoth About Bhagavanth Kesari Remake: இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம்தான் ஜன நாயகன். இந்த படமானது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக என கூறப்பட்ட நிலையில், அது குறித்து இயக்குநர் எச் வினோத் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்துவந்த படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இதை இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) இயக்க, முதலமைச்சர் விஜய் (CM Vijay) நடித்திருந்தார். இந்த படமானது சினிமாவில் முதல்வர் விஜய் நடித்திருந்த கடைசி படமாகும். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், 2025ம் ஆண்டு மே மாதத்திலே முழு ஷூட்டிங்கும் நிறைவடைந்திருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட இப்படம், சென்சார் பிரச்சனைகளின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது கிட்டத்தட்ட 7 மாதத்திற்கு பின் , வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படமானது தெலுங்கு படமான “பகவந்த் கேசரி” (Bhagavanth Kesari) படத்தின் ரீமேக் என கூறப்பட்டுவரும் நிலையில், அது குறித்து இயக்குநர் எச் வினோத் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.




இதையும் படிங்க: AK64 படத்தின் ஷூட்டிங்கில் எப்போது இணைவார் அஜித்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
ஜன நாயகன் படம் ரீமேக்கா என்பது குறித்து இயக்குநர் எச் வினோத் மனம் திறந்துள்ளார்:
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் எச்.வினோத், “நான் ஆரம்பத்தில் தளபதி விஜய்யின் கடைசிப் படத்திற்காக அவரிடம் வேறு ஒரு கதையை விவரித்தேன். அது இரண்டு மாஸ்டர் மின்கள் மோதிக்கொள்வது போல இருந்தது. ஆனால் விஜய் சார், அந்தக் கதை கனமானது என்று கூறி, பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்யச் சொன்னார். பாலையாவின் உலகம் தளபதி விஜய் சாரின் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
இதையும் படிங்க: ஜூலை 23-ம் தேதி வெளியாகும் ஜன நாயகன்… தளபதி விஜய் வெளியிட்ட மாஸ் வீடியோ
நேர்கொண்டபார்வை படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு ரீமேக்கிற்குச் செல்ல வேண்டுமா என்ற பல கேள்விகள் எனக்கு இருந்தன. ஆனால், இது தளபதி விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இந்த வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை” என அதில் அவர் ஓபனாக பேசியிருந்தார்.
ஜன நாயகன் திரைப்படம் குறித்து எச் வினோத் பேசியது தொடர்பான பதிவு:
#HVinoth:
“I initially narrated a different script to #ThalapathyVijay for his last film. It’s like 2 Master Mins clashing😲. But Vijay sir said that script is heavy and asked me to remake #BhagavanthKesari. Balayya universe is different from ThalapathyVijay sir🤞. I had lot of… pic.twitter.com/ymB8exPIhn— AmuthaBharathi (@CinemaWithAB) July 20, 2026
ஜன நாயகன் படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரீ டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. இதுவரை டிக்கெட் புக்கிங்கில் உலகளவில் ரூ 23 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என வட்டாரங்கள் கூறுகிறது.