AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AK64 படத்தின் ஷூட்டிங்கில் எப்போது இணைவார் அஜித்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

AK64 Movie Shooting: தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் விரைவில் உருவாகவுள்ள படம்தான் AK64. இந்த படத்தை அஜித்தின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாக்கவுள்ளது. இதில் அஜித் குமார் எப்போது இணைகிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

AK64 படத்தின் ஷூட்டிங்கில் எப்போது இணைவார் அஜித்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jul 2026 15:54 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பைப்பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்து, மீண்டும் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி AK64 படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த 22025ம் ஆண்டிலே தொடங்கிய நிலையில், தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாம். இந்நிலையில், இதை அஜித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளாராம்.

இதில் ஷாலினி அஜித் குமார்தான் தயாரிப்பாளராக இருப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும், அஜித் எப்போது இணைவார் என்பது குறித்து யோனியத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? – வெளியானது அறிவிப்பு!

AK64 திரைப்படத்தின் ஷூட்டிங்கில் அஜித் எப்போது இணைவார்:

அஜித் குமாரின் AK64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் நிலையில், மிகவும் சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கவுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் 6 நாட்கள் கொண்ட குறுகிய அட்டவணையில் நடக்கவுள்ளதாம். அதை தொடர்ந்து 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முழு அட்டவணையில் ஷூட்டிங் நடைபெற படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.

இதையும் படிங்க: அரசன் படத்தின் காட்சிகளைப் பார்த்து திருப்தியடைந்த தயாரிப்பாளர்? வைரலாகும் தகவல்

அஜித் தனது கார் ரேஸ் பந்தயத்திற்கு செல்வதற்கு முன், டிசம்பர் மாதத்திற்கு முன் படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும் அதற்குள் படத்தின் ஷூட்டிங்கை முடிக்க அஜித் கேட்டுக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

அஜித் குமாரின் AK64 திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:

இந்த திரைப்படத்தில் அஜித் குமார் நாயகனாக நடிக்க, அவருடன் ஸ்ரீலீலா மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடிக்கவுள்ளார்களாம். மேலும் அனிருத் இப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் மாபெரும் வணிகரீதியான குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாக்கவுள்ளதாம். இதை வரும் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us