AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AK64 அப்டேட்.. அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கிறேன் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

Adhik Ravichandran About AK64 movie: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரின் இயக்கத்தில் அஜித் குமார் தனது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடையே பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், AK64 பட அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

AK64 அப்டேட்.. அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கிறேன் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Jul 2026 17:26 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித் குமார் நடித்திருந்தார். கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது, அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அதிகமான வசூலை செய்த படம் என்ற பெயரையோ பெற்றிருந்தது. இதில் அஜித் குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித்தின் கூட்டணியில், AK64 என்ற படமானது உருவாக்கவுள்ளது.

இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், ஷூட்டிங் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆதிக் ரவிச்சந்திரன், AK64 படம் குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: களம் காணும் ஜனநாயகன்.. விஜய் ரசிகர்கள் மத்தியில் எகிறும் டி-ஷர்ட் மவுசு!

AK64 படம் குறித்து அப்டேட்டை தெரிவித்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்:

அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஆதிக் ரவிச்சந்திரனிடம், AK64 படம் குறித்து அப்டேட் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த அவர், “AK64 படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்தது, முன் தயாரிப்பு பணிகளும் முடிந்தது. எனக்கு தெரிந்து, ஆகஸ்ட் 2026ல் ஒரு அறிவிப்பு வரும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இதையும் படிங்க : சல்மான் கானுக்கு என்ன ஆச்சி.. ஆளே எப்படி மாறிட்டாரு பாருங்க – வைரலாகும் வீடியோ!

அதனால் நான் நினைக்கிறேன், நடிகர் பக்கத்தில் அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் பக்கத்திலிருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறேன். அப்படத்தின் அறிவிப்பிற்கு பிறகு படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கிவிடும்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

AK64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாக வைரலாகும் பதிவு:

இயக்குநர் ஆதிக் மற்றும் அஜித் இணையும் படத்திற்கு தற்காலிகமாக AK64 என அழைக்கப்பட்டுவருகிறது. இதை அஜித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஷாலினி அஜித் இருந்து தயாரிப்பாளராக பணியாற்றுகிறார் என கூறப்படுகிறது. இதில் அஜித், ஸ்ரீலீலா மற்றும் கயாடு லோஹர் போன்ற நடிகர்கள் நடிக்கவுள்ளார்களாம். மேலும் ஏற்கனவே அனிருத்துக்கு இசையமைப்பாளருக்கான முன்பணமும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow Us