AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Salman Khan: சல்மான் கானுக்கு என்ன ஆச்சி.. ஆளே எப்படி மாறிட்டாரு பாருங்க – வைரலாகும் வீடியோ!

Salman Khan Latest Look: பாலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் சல்மான் கான். இவரின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில் அவர், ஆளே மாறியபடி,முகத்தில் அதிக சுருக்கங்களுடன் மற்றும் எடை குறைவாக எதோ நோயினால் பாதிக்கப்பட்டவரை போல தோற்றமளிக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

Salman Khan: சல்மான் கானுக்கு என்ன ஆச்சி.. ஆளே எப்படி மாறிட்டாரு பாருங்க – வைரலாகும் வீடியோ!
சல்மான் கான்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Jul 2026 15:25 PM IST

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக புகழப்பட்டுவருபவர் சல்மான் கான் (Salman Khan). இவர் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் நாயகனாக நடித்துவருகிறார். தனது 60வது வயதிலும் படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக கடந்த 2025ம் ஆண்டில் சிக்கந்தர் (Sikandar) என்ற படமானது வெளியாகியிருந்தது. இதில் ராஷ்மிகா (Rashmika) நாயகியாக நடித்திருந்த நிலையில், தமிழ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (Director AR Murugadoss) இயக்கியிருந்தார். இந்த படமானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தது. அந்த வகையில், தற்போது வாரிசு பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி (Director Vamsi Paidipalli) இயக்கத்தில், நயன்தாராவுக்கு (Nayanthara) ஜோடியாக புது படத்தில் நடிக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மும்பையில் மக்களை சந்தித்திருந்த சல்மான்கானின் தோற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில்,சல்மான்கான் உடல் எடை குறைவாகவும், முகத்தில் சுருக்கங்களுடனும் காணப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க: இயக்குநராக எனது முதல் தேசிய விருது.. இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி – தனுஷ்!

இணையத்தில் வைரலாகும் சல்மான்கானின் சமீபத்திய வைரல் வீடியோ:

இந்த வீடியோவில்,தலையில் தொப்பியுடன், பார்ப்பதற்கு எடை குறைந்ததுபோலவே காட்சியளித்திருந்தார். அந்த வீடியோவில் சல்மான்கான், மிகவும் ஒல்லியாக இருகிறார். தலையில் மொட்டையடித்து போலவும் இருக்கிறது.

சல்மான்கானின் நிலைமைக்கு ரசிகர்களின் கருத்து:

சலம்,ஆன் கானின் தோற்றத்தை கண்டா ரசிகர்கள், இணையத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுவருகிறார்கள். அதில் ரசிகர் ஒருவர், இதைப் பார்ப்பது உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. அவருடைய கண்களிலேயே அவர் எவ்வளவு சோர்வாகவும் உடல்நிலை சரியில்லாமலும் இருக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு திரைப்படத்தில் சல்மான் கான் தனியாக 50 பேரைச் சமாளிப்பார், ஆனால் இப்போது சல்மானைப் பாருங்கள், அந்த கம்பீரம் முற்றிலுமாக போய்விட்டது.

இதையும் படிங்க; அவர் செய்தது போல நான் எதுவும் செய்யமாட்டேன்.. முதல்வர் விஜயை மீண்டும் கிண்டல் செய்த மலையாள நடிகர்!

அவருடைய உடல்நிலையும் அவரைப் பாதிக்கத் தொடங்கிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. சல்மான் கானுக்கு என்ன ஆனது? அவருக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு உள்ளதா? என கேள்விகளை எழுப்பியிட்டுள்ளார். இதே போலவே பல்வேறு ரசிகர்களும் இணையத்தில் தங்களின் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us