Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Salman Khan: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை கலாய்த்த சல்மான்கான்!

Salman Khan teases Madharaasi Movie: சல்மான்கானின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சிக்கந்தர். இப்படமானது தோல்வியான நிலையில், முருகதாஸ் இது குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலடி தரும் விதத்தில், சமீபத்தில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சல்மான்கான் மதராஸி படத்தை கிண்டல் செய்துள்ளார்.

Salman Khan: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை கலாய்த்த சல்மான்கான்!
மதராஸி படத்தை கிண்டல் செய்த சல்மான்கான்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Oct 2025 20:00 PM IST

பாலிவுட்டில் பிரபல ஹீரோவாக இருந்துவருபவர் சல்மான்கான் (Salman Khan). இவரின் முன்னணி நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில், இந்த 2025ம் ஆண்டி இறுதியாக வெளியான திரைப்படம் என்றால் அது, சிக்கந்தர் (Sikandar). இந்த படத்தில் சல்மான்கான் முன்னை ஹீரோவாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) மற்றும் காஜல் அகர்வால் (Kajal Aggarwal) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி கடுமையான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இந்த படத்தின் தோல்விக்கு காரணம் சல்மான்கான்தான் என ஏ.ஆர்.முருகதாஸ் மறைமுகமாக பேசியிருந்தார். சல்மான்கான் காலை 9 மணி ஷூட்டிங் வரசொன்னால், இரவு 9 மணிக்குத்தான் ஷூட்டிங் வருவார் என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், சல்மான்கான் சமீபத்தில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏ.ஆர். முருகதாஸ் (AR.Murugadoss) மற்றும் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) மதராஸி (Madharaasi) திரைப்படத்தை கிண்டல் செய்து பேசியுள்ளார்.

இது குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயனைப் பற்றி அவர் பேசியுள்ள நிலையில், இடும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது குறித்து தெளிவாக பறக்கலாம்.

இதையும் படிங்க: மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்த ஆயிஷா… வைரலாகும் வீடியோ

 மதராஸி படம் பற்றி சல்மான்கான் பேசிய விஷயம்

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 19 ஹிந்தி நிகழ்ச்சியானது சமீபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய சல்மான்கான் அதில், ” முதலில் இந்த சிக்கந்தர் படத்தை சஜித் படமாக்கினார். இதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் மதராஸி படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றுவிட்டார். ஏ.ஆர். முருகதாஸ் சொன்னதுபோல, நான் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங்கிற்கு 9 மணிக்குத்தான் வருவேன்.

இதையும் படிங்க: வீங்கிய கால்கள்.. சோர்வடைந்த உடல் – ரிஷப் ஷெட்டி பகிர்ந்த ‘காந்தாரா சாப்டர் 1’ பட கிளைமேக்ஸ் அனுபவம்

ஏனென்றால் எனக்கு விலா எலும்பு உடைந்திருந்தது. அதனால்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த சிக்கந்தர் படத்தை சரியாக எடுக்கமுடியவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் காலை 6 மணிக்கு மதராஸி பட ஷூட்டிங் தளத்திற்கு வந்துவிடுவாராம். அதனால் அந்த படமானது சிக்கந்தர் படத்தை விடவும் பிளாக்பாஸ்டர் ஆகிவிட்டது” என மதராஸி திரைப்படத்தை கிண்டல் செய்து சல்மான்கான் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

மதராஸி படத்தை கிண்டல் செய்து சல்மான்கான் பேசிய வீடியோ பதிவு :

இந்நிலையில் சல்மான்கானின் இந்த பேச்சு தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது. மேலும் ரூ 150 கோடி படம் வெறும் ரூ 100 கோடிதான் வசூல் செய்ததா எனவும் சில கேட்டுவருகின்றனர். இந்நிலையில் சல்மான்கானின் இந்த பேச்சிற்கு ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் எந்த ரியாக்ஷனும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.