Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rishabh Shetty: வீங்கிய கால்கள்.. சோர்வடைந்த உடல் – ரிஷப் ஷெட்டி பகிர்ந்த ‘காந்தாரா சாப்டர் 1’ பட கிளைமேக்ஸ் அனுபவம்

Rishabh Shetty About Kantara Chapter 1 Climax: கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதி வெளியான திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரிஷப் ஷெட்டி எதிர்கொண்ட சவால்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

Rishabh Shetty: வீங்கிய கால்கள்.. சோர்வடைந்த உடல் – ரிஷப் ஷெட்டி பகிர்ந்த ‘காந்தாரா சாப்டர் 1’ பட கிளைமேக்ஸ் அனுபவம்
காந்தாரா சாப்டர் 1Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Oct 2025 17:05 PM IST

கன்னட சினிமாவில் பிரபல கதாநாயகனாகவும் மற்றும் இயக்குநராகவும் இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty). இவர் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா (Kantara) படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய அளவில் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்திற்கு பின் இவர் இயக்கத்தில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படத்திலும் முன்னணி நாயகனாக ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் எமோஷனல் கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இந்த் படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் நடிகர்கள், ஜெயராம் (Jeyaram) மற்றும் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) என பல்வேறு பிரபலங்ககளும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படமானது வெளியாகி 11 நாட்களை கடந்த நிலையிலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின் ஷூட்டிங்கின்போது, வீங்கிய கால்களுடனும், சோர்வடைந்த உடலுடன் நடித்த அனுபவம் பற்றியும், இப்படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நடிகர் ரிஷப் ஷெட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 3வது முறையாக இணையும் ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி!

காந்தாரா சாப்டர் 1 படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்து ரிஷப் ஷெட்டி பகிர்ந்த எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் நடிகர் ரிஷப் ஷெட்டி, “காந்தாரா சாப்டர் 1 படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை எடுக்கும் நேரத்தில், எனது வீங்கிய கால், சோர்வடைந்த உடல் இன்று, மில்லியன் கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. இது நாம் நம்பும் தெய்வீக சக்தியின் ஆசீர்வாதத்தால் மட்டுமே சாத்தியமானது. மேலும் இந்த படத்தை பார்த்த பிறகு தங்களின் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்குமே நன்றி” என நடிகர் ரிஷப் ஷெட்டி அந்த பதிவில் தனது அனுபவம் குறித்தும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

காந்தாரா சாப்டர் 1 படத்தின் வசூல் விவரம்

இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் பாடல்கள் முதல் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் புல்லரிப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அந்த வகையில் சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியிருந்தது.

இதையும் படிங்க: சூர்யாவின் ‘கருப்பு’ ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு உறுதி… அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!

இந்நிலையில், இந்த படமானது வெளியாகி இன்றுடன் சுமாரா 11 நாட்களை கடந்த நிலையில், உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதுவரை இப்படமானது சுமார் ரூ 655 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.