AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியன் 3 பட ஷூட்டிங்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு கெடுவிதித்த சங்கர்.. பின்னணி என்ன?

Indian 3 Movie: இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் தமிழில் பல பிரம்மாண்ட படங்கள் வெளியாகியுள்ளது. அதிலும் இவரின் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் போன்ற படங்கள் தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் இந்தியன் 3 படம் வரும் என கூறப்பட்ட நிலையில், அது குறித்து பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சங்கர் கெடுவிதித்துள்ளார்.

இந்தியன் 3 பட ஷூட்டிங்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு கெடுவிதித்த சங்கர்.. பின்னணி என்ன?
சங்கர் மற்றும் கமல்ஹாசன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Mar 2026 19:25 PM IST

தென்னிந்திய சினிமாவே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு பல பிரம்மாண்ட ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளனர் இயக்குநர் எஸ். சங்கர் (S. Shankar). இவரின் இயக்கத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் கமல்ஹாசன் (Kamal Haasan), ரஜினிகாந்த் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் சங்கர் இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கேம் சேஞ்சர் (Game Changer). இதில் ராம் சரண் (Ram Charan) கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு வெளியானது. இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 400 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் வெளியான நிலையில், எதிர்பாராத வரவேற்பை பெறலாம் தோல்வியுற்றது. அதுபோலத்தான் தமிழில் இவர் இறுதியாக இயக்கியிருந்த இந்தியன் 2 (Indian 2) படமும் பயங்கர தோல்வியில் முடிந்தது. இதில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவனி சங்கர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இந்தியன் 2 படமானது வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்திருந்தது. இப்படத்தின் ஷூட்டிங்கின்போதே இந்தியன் 3 (Indian 3) படத்திற்காக 90 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் சங்கர், லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு கெடுவிதித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

இந்தியன் 3 பட தயாரிப்பு நிறுவனத்திற்கு கெடுதித்த சங்கர்:

இயக்குனர் சங்கர், இரு தோல்வி படங்களை அடுத்தடுத்து கொடுத்த நிலையில், வெற்றிப்படம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் வேள்பாரி என்ற நாவலை படமாக்கவுள்ளதாக அவரே அறிவித்திருந்தார். இந்நிலையில் இதன் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகளானது நடந்து வரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த பிறகு லைகா நிறுவனம் எதாவது பிரச்னை செய்யுமா? என நினைத்த சங்கர் கெடுவிதித்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித் குமாரின் AK 64 படத்தை தயாரிப்பது அந்த பிரபல நிறுவனமா? வைரலாகும் தகவல்

அவர் லைகா நிறுவனத்திடம் தனக்கு 3 மாதங்கள் டைம் கொடுத்தால், இந்தியன் 3 படத்தின் ஷூட்டிங்கை முழுமையாக முடித்து தருவதாகவும், இல்லையென்றால் வேள்பாரி பட ஷூட்டிங்கிற்கு பிறகே இந்தியன் 3 பட ஷூட்டிங் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளாராம். இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகபரவிவருகிறது.

இயக்குநர் சங்கர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வேள்பாரி என்ற படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகளானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்னும் இதில் எந்த நடிகர் நடிக்கிறா?, யார் யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இப்படமானது கிட்டத்தட்ட ரூ 500 முதல் ரூ 600 கோடி பட்ஜெட்டில் தயாராவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us