AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அஜித் குமாரின் AK 64 படத்தை தயாரிப்பது அந்த பிரபல நிறுவனமா? வைரலாகும் தகவல்

Ajith Kumar 64 Movie Production Company Update: தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் 64-வதாக உருவாக உள்ள படத்தினை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அஜித் குமாரின் AK 64 படத்தை தயாரிப்பது அந்த பிரபல நிறுவனமா? வைரலாகும் தகவல்
அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 09 Mar 2026 14:21 PM IST

தமிழ் சினிமாவில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். சினிமாவில் எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் தனது சொந்த உழைப்பின் மூலமாக இந்த இடைத்தப் பிடித்துள்ளார். இதன் காரணமாகவே இவரது ரசிகர்கள் அஜித் குமாரை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் அஜித் குமார் தனது கார் ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். படம் ரேஸிங் என்று பிசியாக வலம் வரும் அஜித் குமார் உலக அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்று இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள படம் குறித்த தகவல்களும் அவ்வபோது வெளியாகி வைரலாகி வருகின்றது.

அஜித் குமாரின் AK 64 படத்தை தயாரிப்பது அந்த பிரபல நிறுவனமா?

அஜித் குமாரின் 64-வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார். இவர் இறுதியாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது முறையாக நடிகர் அஜித் குமார் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தினை யார் தயாரிக்க உள்ளது என்பதில் தொடர்ந்து இழுபறி நிழவி வருகின்றது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் அடிபட்டு வரும் நிலையில் தற்போது முதலாவதாக கூறப்பட்டு வந்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயரே அடிபடுகின்றது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தகவல்கள் வைரலான நிலையில் தற்போது வரை தயாரிப்பு நிறுவனம் முடிவாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Priyanka Mohan: மேட் இன் கொரியா பட ஷூட்டிங் சிக்கல்கள் – மனம் திறந்த பிரியங்கா மோகன்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் நடித்தது இப்படிதான் – இயக்குநர் வாசு ஓபன் டாக்!

Follow Us