Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை பார்க்கும் மறு ஆய்வுக்குழு .. சென்சார் எப்போது கிடைக்கும்?
Jana Nayagan Censor Update: தளபதி விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் திரைப்படம் தான் ஜன நாயகன். இது சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் இப்படத்தை ரிவைசிங் கமிட்டி பார்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்தும் மற்றும் சென்சார் எப்போது கிடைக்கும் என்பது பற்றியும் பார்க்கலாம்.
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் கடைசி திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவ்வரிகள் இருவரின் ஜோடி ஏற்கனவே நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் (Beast) என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தளபதி விஜய் தற்போது முழுமையாக அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இவர் சினிமாவில் இனிமேல் எந்த படங்களிலும் நடிக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆகையால் அவரின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இதை இயக்குநர் எச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ள நிலையில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் தள்ளிக்கொண்டேப்போனது.
அந்த வகையில் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், படக்குழு அதை வாபஸ் பெற்றது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னே, ரிவைசிங் கமிட்டிக்கு ஜன நாயகன் படம் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 2026 மார்ச் 9ம் தேதியில் மறு ஆய்வுக்குழு ஜன நாயகன் படத்தை பார்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: ஒரு பாட்டுதான் போட்டு காமிச்சேன்.. அட்லீ அண்ணா சொன்னதும் ஆடிபோய்ட்டேன் – சாய் அபயங்கர்!
ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் எப்போது கிடைக்கும்:
சென்சார் குழு ஜன நாயகன் படக்குழுவிற்கு அறிவுறுத்திய மாற்றங்கள் மற்றும் காட்சிகள் நீக்கங்களுக்கு பின், மறு ஆய்வுக்குழுவிற்கு இப்படம் அனுப்பப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு முன்னே இப்படம் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்ட நிலையில், வரும் 2026 மார்ச் 9ம் தேதியில் மறு ஆய்வுக்குழு இப்படத்தை பார்க்கவுள்ளதாம்.
இதையும் படிங்க: ஒரே நிற உடையில்.. ஒன்றாக திருமண விழாவில் கலந்துகொண்ட விஜய் மற்றும் திரிஷா – வைரலாகும் வீடியோ!
இப்படத்தை பார்த்த 2 வாரங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சென்சார் இப்படத்திற்கு கிடைத்திருந்தாலும், ஜன நாயகன் படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகே வெளியிட திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் பட சென்சார் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
– The #JanaNayagan revising committee will watch the film on March 9.
– The censor certificate is expected to be issued within two weeks. The film is aiming for a post-election release.#ThalapathyVijay pic.twitter.com/x1PMxJktr5
— Movie Tamil (@_MovieTamil) March 6, 2026
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக ஜன நாயகன் தயாராகியுள்ளநிலையில், இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ 500 கோடிகளுக்கு மேல் தயாராகியுள்ளது. ஆனால் ரிலீசிற்கு முன்னே இப்படம் கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது விஜய்யின் கடைசித் திரைப்படம் என்ற நிலையில், இப்படமானது வெளியானால் கிட்டத்தட்ட ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.