AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தலுக்கு பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட திட்டமிடும் படக்குழு – வைரலாகும் தகவல்

Jana Nayagan Movie expecting release after Tamil Nadu elections: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் வெளியீடு எப்போது இருக்கும் என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தேர்தலுக்கு பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட திட்டமிடும் படக்குழு – வைரலாகும் தகவல்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Mar 2026 18:05 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதன் காரணமாக நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அந்தப் படத்தினை அப்படியே ரீமேக் செய்யவில்லை என்றும் ஆனால் அதலிருந்து சில காட்சிகள் ஜன நாயகன் படத்தில் இன்ஸ்பயர் செய்யப்பட்டுள்ளது என்றும் இயக்குநர் எச் வினோத் தெரிவித்தது இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் இந்தப் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தார். படம் கடந்த 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் வெளியீடு சென்சார் பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தலுக்கு பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட திட்டமிடும் படக்குழு:

இந்த நிலையில் ஜன நாயகன் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி, மார்ச் 17 ஆம் தேதிக்குள் தணிக்கைக் குழு படத்தைப் பார்த்து தணிக்கைச் சான்றிதழை வழங்கும் என்று ஜன நாயகன் குழுவினர் எதிர்பார்க்கின்றனர். எனவே, தற்போது, ​​தமிழகத் தேர்தல்கள் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு கே.வி.என். புரொடக்ஷன்ஸ் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வாரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், படம் அடுத்த வாரத்தின் வியாழக்கிழமை வெளியாகும். எனவே, தற்போதைய நிலவரப்படி, படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

Also Read… Rukmini Vasanth: தேவையற்ற ஜூம்கள்.. தவறாக பயன்படுத்தப்படும் நடிகைகளின் போட்டோஸ் – ருக்மிணி வசந்த் கண்டனம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தலைவா அரசியல் படம் இல்லை – இயக்குநர் ஏ எல் விஜய்!

Follow Us