Suraj Venjaramoodu: யூத் படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு காரணம் இதுதான் – சுராஜ் வெஞ்சாரமூடு!
Suraj Venjaramoodu About Youth Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்திருக்கும் நிலையில், தற்போது கென் கருணாஸின் யூத் என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் நடிப்பதற்கு எவ்வாறு ஒத்துக்கொண்டேன் என்பது குறித்து, சுராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu) மலையாள சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துவந்த நிலையில், அதை தொடர்ந்து மம்முட்டி (Mamooty) முதல் மோகன்லாலுடனும் (Mohanlal) படங்களில் நடித்துவிட்டார். இவரின் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பல படங்கள் தமிழிலும் இவருக்கு ரசிகர்களை தேடித்தந்தது. அந்த விதத்தில் நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) வீர தீர சூரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்தார். இப்படத்தில் அதிரடி வில்லன் வேடத்தில் இவர் நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தார். இப்படத்தை அடுத்தாக இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் “யூத்” (Youth). இதை கென் கருணாஸ் (Ken Karunas) இயக்கி நடித்திருக்கும் நிலையில், பர்வதா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, கென் கருணாஸின் தந்தை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 2026 மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சுராஜ், யூத் படத்தில் நடிக்க ஓகே சொன்னது எப்படி என தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் – அட்லீயின் AA22 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்!
யூத் திரைப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது குறித்து சுராஜ் வெஞ்சாரமூடு பேச்சு:
சமீபத்தில் நேர்காணலில் பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு அதில், “நான் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும்போதுதான், யூத் பட தயாரிப்பாளர் என்னிடம் பேசினார். அவர் எனக்கு நண்பர்தான். அப்போதுதான் கென் கருணாஸின் படம் பற்றி என்னிடம் தெரிவித்திருந்தார். அப்போது அவர் யூத் படத்தின் கதையை கொஞ்சம் சொல்லியிருந்த நிலையில், பின் கேரளாவிற்கு வந்து கென் கருணாஸும் என்னிடம் படத்தின் கதையை கூறினார்.
இதையும் படிங்க: கலர்ஃபுல்லான சங்கீத் புகைப்படங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் போட்டோஸ்
அவர் கதையை சொல்லும்போது, ஒவ்வொரு விஷயத்திலும் அவருக்கு தெளிவு இருந்தது, அவர் படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கேரக்டரையும் அவர் எமோஷனலாக சொன்னாரு. கதை சொல்லும்போது எனக்கு சூப்பர் என தோன்றியது. அப்போதுதான் தயாரிப்பாளர் நிச்சயமாக படத்தின் கதையை கேட்கவேண்டும் என்று சொன்னாரு சரிதான் என புரிந்தது. அப்போதுதான் யூத் படம் பண்ணலாமே என முடிவெடுத்தேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
யூத் திரைப்படம் குறித்து சுராஜ் வெஞ்சாரமூடு வெளியிட்ட பதிவு:
View this post on Instagram
இந்த யூத் படமானது பள்ளிப்பருவ காதல் மற்றும் மிடில்கிளாஸ் குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகியுள்ளது. இப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியதர்ஷினி, அனிஷிமா அனில்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.