AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் சிறப்பாக வந்துள்ளது – நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

Suraj Venjaramoodu talks about Jailer 2 movie: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படம் எப்படி வந்துள்ளது என்பது குறித்து படத்தில் நடித்த சுராஜ் வெஞ்சாரமூடு வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் சிறப்பாக வந்துள்ளது – நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு
ரஜினிகாந்த் உடன் சுராஜ் வெஞ்சாரமூடுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Mar 2026 11:58 AM IST

மலையாள சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் நடிகராக நடிக்கத் தொடங்கினார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தற்போது கதையின் நாயகனாகவும் அவ்வபோது படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகப் படங்களில் நடித்து வரும் சுராஜ் வெஞ்சாரமூடு கடந்த 2025-ம் ஆண்டு இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து வெளியான வீர தீர சூரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. அதன்படி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு அடுத்ததாக தமிழ் சினிமாவில் யூத், கர மற்றும் ஜெயிலர் 2 ஆகியப் படங்களில் நடித்துள்ளார். இதில் யூத் படம் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அந்தப் பேட்டியில் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ள தமிழ் படங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் சிறப்பாக வந்துள்ளது:

நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு அளித்தப் பேட்டியில் கூறியதாவது, ஜெயிலர் 2 படம் சூப்பராக வந்துள்ளது. முதல் பாகத்தை ஒப்பிடும்போது, ​​இது இன்னும் நல்லா இருக்கும். ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஆச்சரியப்படுத்துவார், உண்மையிலேயே ஒரு மேஜிக் கலைஞர். தமிழில் ஒரு சரியான படம் வெளியாகும்னு நான் காத்திருந்தேன். இப்போ யூத், காரா, ஜெயிலர் 2னு 3 படங்கள் பண்ணிட்டேன் என்று சுராஜ் வெஞ்சாரமூடு தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது தபாஹி சிங்கிள் வீடியோ!

இணையத்தில் கவனம் பெறும் சுராஜ் வெஞ்சாரமூடு பேச்சு:

Also Read… மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு

Follow Us