AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது தபாஹி சிங்கிள் வீடியோ!

Tabaahi Single Video From Toxic Movie | ராக்கிங் ஸ்டார் நடிகர் யாஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தில் இருந்து தற்போது தபாஹி என்ற சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது தபாஹி சிங்கிள் வீடியோ!
தபாஹிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Mar 2026 13:56 PM IST

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராக்கிங் ஸ்டார் நடிகர் யாஷ். இவர் சினிமாவில் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் கன்னட சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் பாகம் ஒன்று படம் உலக அளவில் அவரை பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் யாஷின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் உலக அளவில் விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் தற்போது நடித்து உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தில் நாயகனாக நடித்தது மட்டும் இன்றி படத்தின் திரைக்கதையை இயக்குநர் கீது மோகந்தாஸ் உடன் இணைந்து எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான கேவிஎன் புரடெக்‌ஷன் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் புரடெக்‌ஷன் சார்பாக தயாரிப்பாளர்கள் வெங்கட் கே நாராயணா மற்றும் யாஷ் இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர்.

டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது தபாஹி சிங்கிள் வீடியோ:

நடிகர் யாஷ் நடிப்பில் பீரியட் கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ள டாக்ஸிக் படம் வருகின்ற 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து முதல் சிங்கிளான தபாஹி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் பாடலின் தமிழ் லிரிக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் யாஷ் உடன் இணைந்து கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

Also Read… சூர்யா46 பட டைட்டில் இதுவா? – இணையத்தில் கசிந்த தகவல்!

டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Vijay Deverakonda: ‘என்னை மிகவும் உணர்ச்சிப்பட வைத்தது’ – விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எமோஷனல் பதிவு!

Follow Us