AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ravi Mohan: எல்லாத்துக்குமே ஒரே ரியாக்ஷன் தான்.. அந்த ஹீரோவின் நடிப்பை கண்டு வியந்தேன் – ரவி மோகன் சொன்ன விஷயம்!

Ravi Mohan: தமிழில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் ரவி மோகன். இவர் இறுதியாக பராசக்தி படத்தில் நடித்திருந்த நிலையில், மேலும் புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், பிரபல நடிகர் ஒருவரின் நடிப்பை கேலி செய்து பேசியுள்ளார். அந்த நடிகர் யார் என பார்க்கலாம்.

Ravi Mohan: எல்லாத்துக்குமே ஒரே ரியாக்ஷன் தான்.. அந்த ஹீரோவின் நடிப்பை கண்டு வியந்தேன் – ரவி மோகன் சொன்ன விஷயம்!
ரவி மோகன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 01 Mar 2026 08:36 AM IST

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தற்போது சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என புது அவதாரம் எடுத்துள்ளார். இவர் புதிதாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நிலையில், அதன் கீழ் “அன் ஆர்டினரி மேன்” (An Ordinary Man) என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதில் யோகி பாபு (Yogi Babu) தான் கதாநாயகனாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த் படமானது இந்த 2026 ஆண்டின் இறுதிக்குள் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரவி மோகனின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இதில் இவர் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதையடுத்து இவரின் நடிப்பில் கராத்தே பாபு (Karathey babu), ஜீனி, ப்ரோ கோட் (Bro Code) உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் தயாராகியுள்ளது.

தற்போது இவர் இயக்குநராகவும் படத்தை இயக்க ஆரம்பித்த நிலையில், இப்படம் கிட்டத்தட்ட ரூ 25 முதல் 30 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில காலங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய ரவி மோகன், பிரபல நடிகரின் நடிப்பை கேலி செய்து பேசியிருந்தார். அந்த நடிகர் யார் என பார்க்கலாம்.

இதையும் படிங்க: 70ஸ் நடிகரின் மகள் டூ பிரபல நடிகரின் மனைவி.. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா?

பிரபலர் நடிகரின் நடிப்பை கேலி செய்து நடிகர் ரவி மோகன் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் ரவி மோகனிடம், தொகுப்பாளர் ” உங்களுக்கு எந்த ஹீரோவையாவது பார்த்து இவருக்கு நடிக்கவே தெரியவில்லை என தோன்றியிருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரவி மோகன், “ஒரு ஹீரோ இருக்காரு, பழைய ஹீரோ அவரு. அவர் எப்படின்னா, அம்மா செத்தாலும் ஒரே மாதிரி நடிப்பாரு, லவ் என்றாலும் ஒரே மாதிரி நடிப்பாரு.

இதையும் படிங்க: சியான் விக்ரமின் நடிப்புத் திறமையை கண்டு வியந்தேன் – வெளிப்படையாக பேசிய எஸ்.ஜே. சூர்யா!

அவர் ஓவரா நடிக்கவேண்டும் என இல்லை, வெறும் ரியாக்ஷன் மட்டும்தான். அவரின் நடிப்பைத்தான் வியந்து பார்த்தேன்” என தெரிவித்திருந்தார். அந்த நேர்காணலில் அந்த நடிகரின் பெயரை ரவி மோகன் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்டு சொன்னது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு என கூறப்படுகிறது. அவரை தான் நடிகர் ரவி மோகன் அந்த நேர்காணலில் தாக்கி பேசினார் என கூறப்படுகிறது.

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட இன்ஸ்டாகிடம் போட்டோஷூட் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Ravi Mohan (@iam_ravimohan)

நடிகர் ரவி மோகனின் கைவசத்தில் கிட்டத்தட்ட 5 படங்கள் உள்ளது. கராத்தே பாபு, ப்ரோ கோட், ஜீனி போன்ற படத்தில் இவர் நடித்து முடித்துவிட்டார். மேலும் இயக்குநராகவும் படம் இயக்கிவரும் நிலையில், இவர் மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் படத்தில் வர வில்லனாக நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us