Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

RJ. Balaji: அதற்காக சிவகார்த்திகேயனிடம் நான் மன்னிப்பு கேட்டேன் – ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்!

RJ Balaji Opens Up About Sivakarthikeyan Apology: தமிழில் பிரபல இயக்குநராக தற்போது இருந்துவருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தமிழில் நயன்தாரா முதல் சூர்யா போன்ற பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக்கேட்ட சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

RJ. Balaji: அதற்காக சிவகார்த்திகேயனிடம் நான் மன்னிப்பு கேட்டேன் – ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்!
சிவகார்த்திகேயன் மற்றும் ஆர் ஜே பாலாஜிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Feb 2026 08:24 AM IST

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ. Balaji) தமிழில் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் பங்குபெற்றுவந்தார். பின் சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் வெளியான “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற படத்தில், துணை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் காமெடியனாக பிரபலமானார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடித்து மக்களுக்கு நெருக்கமானார். பின் இயக்குநராக அவதாரம் எடுத்த இவர், மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman) என்ற படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2020ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் நயன்தாரா (Nayanthara) நடித்து அசத்தியிருந்தார். மேலும் வீட்டுல விசேஷம் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இவ்வாறு இயக்குநராக பிரபலமான இவர், தொடர்ந்து சூர்யாவை (Suriya) வைத்து கருப்பு (Karuppu) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) பற்றி நிகழ்ச்சி ஒன்றில் தவறாக பேசியது குறித்து மனம் திறந்திருந்தார்.

இதையும் படிங்க: எனது அடுத்த திரைப்படம் இதுதான்? மகான் 2 படம் எப்போது உருவாகும் – கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்!

சிவகார்த்திகேயனிடம் தவறாக பேசியது குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “நான் ஒரு அவார்ட் ஷோவை கலாய்க்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி பண்ணியிருந்தேன். நான் அந்த நிகழ்ச்சியில், ஒருமுறை சிவகார்த்திகேயன் ஒரு அவார்ட் ஷோவில் எமோஷனலாக பேசியிருந்தார். அதை நான் கலாய்க்கும் விதத்தில் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தேன். நான் அந்த விஷயத்தை பண்ணும்போது எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. பின் ஒருமுறை இதை தொலைக்காட்சில் நான் பார்த்திருந்தேன், அப்போது எனக்கு இது மிகவும் தவறாக தெரிந்தது.

இதையும் படிங்க: சசிகுமாரை காப்பாற்றுவார்கள்… என்னைக் காப்பாற்ற வரமாட்டார்கள் – வெளிப்படையாக பேசிய எச்.வினோத்!

அது சரியான விஷயமும் இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் அவருக்கு நான் கால் செய்து மன்னிப்பு கேட்டிருந்தேன். அவரிடம் நான் அங்கு பேசும்போது தவறாக தெரியவில்லை, ஆனால் தற்போது அதை அவரு என உணர்ந்துவிட்டேன்” என அவரிடம் தெரிவித்ததாக அதில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

கருப்பு திரைப்படம் குறித்து ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட பதிவு:

ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் கருப்பு படத்த்தின் ஷூட்டிங் 2024 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக தயாராகிவருகிறது. இப்படத்தை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் வெளியிடுவதற்காக படக்குழு திட்டமிட்டுவருகிறது.