Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: நான் நடிக்கவருவதற்கு முன் அந்த வேலையில் ஆர்வம் அதிகம்.. ஆனால் – தனுஷ் பகிர்ந்த விஷயம்!

Dhanush About His First Dream: நடிகர் தனுஷ் நடிப்பில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் முன்பு ஒரு நேர்காணலில் பேசிய தனுஷ், தான் சினிமாவிற்கு வருவதற்கு முன் என்ன வேலை செய்ய ஆசைப்பட்டார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Dhanush: நான் நடிக்கவருவதற்கு முன் அந்த வேலையில் ஆர்வம் அதிகம்.. ஆனால் – தனுஷ் பகிர்ந்த விஷயம்!
தனுஷ் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Feb 2026 16:31 PM IST

தமிழில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு இந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் பான் இந்திய நாயகனாக தனுஷ் இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் மட்டுமே கடந்த 2025ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் படங்கள் வெளியாகியிருந்தது. இதில் இந்தியில் வெளியான தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) படமானது எதிர்பாராத வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது அடுத்தடுத்த தமிழ் படங்களிலும் இவர் நடித்துவருகிறார். இவை சினிமாவில் தனது தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜாவின் (Kasthuri Raja) இயக்கத்தில் “துள்ளுவதோ இளமை” (Thulluvadho Ilamai) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்களிடையே அந்தளவிற்கு வரவேற்கப்படவில்லை.

இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தனது திறமையின் மூலமாக, தற்போது பான் இந்திய நாயகனாக முன்னேறியுள்ளார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த தனுஷ், தான் சினிமாவிற்கு நடிப்பதற்காக வருவதற்கு முன் என்ன ஆகவேண்டும் என ஆசைப்பட்டதை பற்றி தெரிவித்துள்ளர்.

இதையும் படிங்க: கல்லூரிகளில் எனது படங்களை ஒருபோதும் புரோமோஷன் செய்யமாட்டேன் – சசிகுமார் பேச்சு!

தனுஷின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Kriti Sanon 🦋 (@kritisanon)

சினிமாவிற்கு முன் தனது ஆசை பற்றி தனுஷ் பேச்சு :

அந்த நேர்காணலில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “தனுஷிடம் சினிமாவில் நடிப்பை எவ்வாறு கற்றுக்கொண்டீர்கள், எவ்வாறு உங்களின் நடிப்பை வெளிப்படுத்துகிறீர்கள்?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த தனுஷ், “நான் ஒரு நடிகனாக ஆரம்பத்திலிருந்து தயாராகவில்லை. நான் எனது இயற்கையான நடிப்பையே வெளிப்படுத்திக்கிறேன். ஆனால் அதற்கெள்ளலாம் முன்பு ஒரு செஃப்பாகதான் விரும்பினேன். எனக்கு அப்போது சமைக்க தெரியாது. இருந்தாலும் எனது அம்மாவின் சமையல், அவர் பரிமாறும் விதம் எல்லாமே எனக்கு பிடிக்கும். சமையல் என்பது ஒரு காதலுடன் உணவை சமைக்கும் ஒரு கலை.

இதையும் படிங்க: வேறு எந்த படத்திலும் அதுபோன்ற திருப்தி இல்லை – அனுபமா பரமேஸ்வரன்!

எனக்கு மற்றவர்களுக்கு உணவை பரிமாறுவதற்கு ரொம்பவே பிடிக்கும். அப்போதிலிருந்து எனது அம்மாவிற்கு உதவியாக சமையலறையில் பணிகளை செய்திருக்கிறேன். அப்போது நான் செஃப் ஆகவேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால் எனது தந்தை எனக்காக மற்றொரு திட்டத்தை வைத்திருந்தார். நான் எனது முதல் 2 படங்களில் நடித்தபோதெல்லாம், நடிக்க வேண்டாம், நடிப்பை விட்டு ஓடிவிடலாம் என நினைத்தேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பின் மீது ஒரு புரிதல் வந்தது. அதனால் பலரிடம் இருந்து அவர்களின் எமோஷனல் மற்றும் அவர்களின் செயல்களை உள்வாங்கினேன். அதனை எனது பாணியில் திரையில் வெளிக்காட்டுகிறேன்” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.