Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Anupama Parameswaran: வேறு எந்த படத்திலும் அதுபோன்ற திருப்தி இல்லை – அனுபமா பரமேஸ்வரன்!

Anupama Parameswaran About Bison Movie Experience: தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக கலக்கிவருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தொடர்ந்து கதாநாயகியாக படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அந்த விதத்தில் பைசன் படத்திற்கு பின் வேறெந்த படத்திலும், சிறப்பாக நடித்தது போன்ற திருப்தி இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Feb 2026 21:18 PM IST
மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் நிவின் பாலியின் பிரேமம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து, தென்னிந்திய மக்களிடையே பிரபலமானார். இப்படத்தை அடுத்ததாக தெலுங்கு, தமிழ் போன்ற மொழியாக்களிலும் நடிக்க தொடங்கினர்.

1 / 5
தமிழில் நடிகை சாய் பல்லவியை போலவே, தனது முதல் படத்திலே தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 2016ம் ஆண்டில் வெளியான கொடி என்ற படத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார். ஆனாலும் இவருக்கு தமிழில் வெற்றிப்படங்கள் எதுவும் அமையவில்லை. அதன் காரணமாக தெலுங்கு சினிமாவின் பக்கம் சென்றுவிட்டார்.

2 / 5
இவர் தெலுங்கில் இவர் பிரபல நடிகர்களான நானி, ராம் போதினேனி, பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போன்ற நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தெலுங்கிலும் படங்கள் பெரிதாக வரவேற்கப்படவில்லை. பின் நயன்தாரா மற்றும் திரிஷா போன்ற நடிகைகளை போலவே பெண் லீட் கதாபாத்திரங்கள் கொண்ட கதையை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினர்.

3 / 5
இவர் கடந்த 2025ம் ஆண்டில் மாரி செல்வராஜ் இயக்கதில் வெளியான பைசன் படத்தில், துருவ விக்ரமிற்கு ஜோடியாக நடித்து மீண்டும் தமிழில் பிரபலமானார். இப்படத்தை அடுத்ததாக 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் லாக்டவுன் என்ற பெண்ணியம் குறித்த படம் வெளியாகியிருந்தது. இது ஓரளவு நல்ல வரவேற்பை இவருக்கு கொடுத்தது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பைசன் படத்தில் பணியாற்றிய தருணம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

4 / 5
நடிகை அனுபமா பரமேஸ்வரன், பைசன் படத்தில் எனது கதாபாத்திரம் குறித்த புகழ் மாரி சாரையே சேரும். துருவ் சொல்லியிருந்தார் இது அவரின் முதல் படம் என்று, அதுபோலத்தான் எனக்கும் இது முதல் படம் போல இருந்தது. எனது முதல் படத்திலிருந்து பைசன் படம் வரையில் எனது ஒரு வெர்சனைத்தான் நான் பார்த்திருக்கிறேன். பைசன் படத்திற்கு பின், எனது மறுபக்கத்தையும் நான் உணர்தேன். அதன் பிறகு வேறு எந்த படத்தின் ஷூட்டிங் சென்றாலும் ஒரு நடிகையாக எனக்கு எதுவும் திருப்தியாக இல்லை என தெரிவித்திருந்தார்.

5 / 5