AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க… கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!

KKSSR Ramachandran : முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்று பேரைவக்கு வரும் போது பாதி பேர் இருக்க மாட்டார்கள் என்று பரபரப்பாக பேசினார். பேரவையில் அப்பாவை காணோம் என சிலர் கூறிய கருத்துக்கு இந்த கருத்தை முன் வைத்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க… கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!
கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 17 Aug 2026 15:15 PM IST

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று திங்கள்கிழமை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பேசினார். அப்போது, சட்டப்பேரவையில் சிலர் அப்பாவை காணும் என்று சொல்கின்றனர். அவர் ( முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின்) இங்கு வரும்போது பாதி பேர் இருக்க மாட்டார்கள். ஆனால், நாங்கள் இருப்போம் என்று தெரிவித்தார். அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும், அவை முன்னவருமான கே. ஏ. செங்கோட்டையன் எழுந்து, எங்கள் முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் இருக்கும் வரை இனி தமிழகத்தில் உங்களால் தலை தூக்க முடியாது.

திமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை

சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். இதற்கு, பதில் அளித்து பேசிய கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் தோல்வியுற்று விழுந்து உள்ளது. ஆனால், விழுந்த வேகத்தில் மீண்டும் நிச்சமாக எழும். அதுதான் திராவிட முன்னேற்ற கழகம் என்று தெரிவித்தார். இதற்கு, அவை முன்னவர் கே. ஏ. செங்கோட்டையன், முன்னாள் முதல்- அமைச்சர் எம். ஜி. ஆர். இருந்தவரை திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறவில்லை.

மேலும் படிக்க: “ஆதாரம் என்கிட்ட இருக்கு!”.. பேரவையில் புள்ளிவிவரங்களுடன் பாய்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. திமுக-வினருடன் கடும் வாக்குவாதம்!

எம்ஜிஆர் இருந்த வரை திமுக வெற்றி பெறவில்லை

புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிருடன் இருந்த வரை திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்று தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் கே. என். நேரு, கடந்த 1980- ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றது. இதேபோல, 1986- ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றியே பதிவு செய்தது என்று தெரிவித்தார்.

ஆட்சி கலைப்பில் ஈடுபட்ட திமுக

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சரும், அவை முன்னவருமான கே. ஏ. செங்கோட்டையன், கடந்த 1980- ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றனர். அங்கு, ஆட்சியையும் கலைத்தனர். ஆனால், மீண்டும் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை எம்ஜிஆர் தான் படைத்தார் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுகவினரிடம் SORRY கேட்ட முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?.. முழு விவரம்!!

Follow Us