AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஈரல் சாப்பிடுறீங்களா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

Health Benefits: கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை இரத்தசோகையைப் போக்கவும் நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. எனினும், இதில் அதிக அளவு கொலஸ்ட்ரால் மற்றும் புரதம் இருப்பதால் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது அவசியமாகும்.

ஈரல் சாப்பிடுறீங்களா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
ஈரல்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 03 Oct 2026 17:00 PM IST

அசைவ உணவுகளில் சிக்கன் ஈரல் மற்றும் மட்டன் ஈரல் ஆகிய இரண்டும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவுகளாகக் கருதப்படுகின்றன. கோழி ஈரலில் அதிக அளவிலான இரும்புச்சத்து, வைட்டமின் B12 மற்றும் ஃபோலேட் உள்ளதால், இது இரத்தசோகையைக் குணப்படுத்தி உடலால் எளிதில் செரிமானம் செய்யப்படுகிறது. ஆட்டு ஈரலில் துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற கனிமச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், இது நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி நினைவாற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எளிதில் செரிமானமாக விரும்புபவர்கள் கோழி ஈரலையும், கூடுதல் ஊட்டச்சத்து தேவைப்படுபவர்கள் ஆட்டு ஈரலையும் உணவில் தேர்வு செய்து உட்கொள்ளலாம். இருப்பினும், ஈரலில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகமாக உள்ளதால், இதய நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

சத்துக்கள் நிறைந்த கோழி ஈரல்

அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் ஈரலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இருப்பினும், கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரலில் எது உடலுக்கு அதிக நன்மைகளைத் தரும், யாரெல்லாம் இதைச் சாப்பிடக் கூடாது என்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கிறது. கோழி ஈரலில் சாதாரண கறியை விட 10 சதவீதம் வரை அதிகமாக இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு இரத்தசோகையைக் குணப்படுத்தவும், இரத்தத்தின் அளவை விரைவாக உயர்த்தவும் உதவுகிறது. மேலும், இதில் வைட்டமின் ஏ, பி12, ஃபோலேட் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. சுலபமாகச் செரிமானமாகும் தன்மையுடைய இது, குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து பெற விரும்புபவர்களுக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள உணவாக அமைகிறது.

மூளை வளர்ச்சிக்கு உதவும் ஆட்டு ஈரல்

ஆட்டு ஈரலில் வைட்டமின் ஏ, டி, பி12 உடன் துத்தநாகம், தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. கோழி ஈரலை விட இதில் துத்தநாகமும் தாமிரமும் அதிகம் என்பதால், நரம்புகளை பலப்படுத்தவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் இது பெரிதும் உதவுகிறது. மேலும், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, செல்கள் அனைத்துக்கும் தேவையான ஆக்சிஜனை சீராகக் கொண்டு சேர்க்க இது பயன்படுகிறது. எளிமையான செரிமானம் தேவைப்படுவோருக்கு கோழி ஈரலும், கூடுதல் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுவோருக்கு ஆட்டு ஈரலும் ஏற்றது.

Also Read: வாடகை வீடா? சுவரை பாழாக்காமல் வரவேற்பறையை அசத்தலாக மாற்றலாம் இதோ!

ஈரல் உணவைத் தவிர்க்க வேண்டியவர்கள்

ஈரலில் அதிகளவு கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் இருப்பதால், இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதேபோல், இதில் உள்ள அதிகப்படியான புரதம் மற்றும் தாதுக்கள் சிறுநீரகத்திற்கு கூடுதல் அழுத்தத்தை தரும் என்பதால், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும். இதில் வைட்டமின் ஏ அளவு அதிகமாக இருப்பதால், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது. இதுதவிர, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஈரலை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் சாப்பிடாமல், நன்றாக வேகவைத்து உண்பதே உடலுக்குப் பாதுகாப்பானது.

Follow Us