AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: ஆசிய விளையாட்டில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தங்கம்.. மலேசியாவை வீழ்த்தி அசத்திய வீரர்கள்..

Gold Medal - Men's Hockey Team: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, ஆசிய சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொண்டது. 

Asian Games 2026: ஆசிய விளையாட்டில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தங்கம்.. மலேசியாவை வீழ்த்தி அசத்திய வீரர்கள்..
ஆசிய விளையாட்டில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தங்கம்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 03 Oct 2026 17:38 PM IST

அக்டோபர் 3, 2026: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, ஆசிய சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தகுதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆடவர் ஹாக்கி அணிக்கு தங்கம்:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெல்லும் 5-வது தங்கப் பதக்கம் இதுவாகும். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் ஒரே பதிப்பில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் இரண்டும் தங்கப் பதக்கம் வெல்வது 2026ஆம் ஆண்டில்தான் முதல்முறையாகியுள்ளது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாக்கி தங்கத்தை வென்று, நீண்டகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இறுதி போட்டிக்கு முன்னேறிய ஹாக்கி அணி:

ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இதற்கு முன்பு நடைபெற்ற பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியான பரம எதிரியான பாகிஸ்தானை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மலேசியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், முதல் காலிறுதியின் தொடக்கத்திலேயே ஹர்மன்ப்ரீத் சிங் பெனால்டி கார்னரை கோலாக மாற்றி இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், மூன்று நிமிடங்களுக்குள் மலேசியா பதிலடி கொடுத்து கோல் அடித்தது. இரண்டாவது காலிறுதியில் இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது. ஷிலானந்த் லக்ரா சிறப்பாக பந்தை எடுத்துச் சென்று பெனால்டி பகுதிக்குள் நுழைந்து இந்தியாவுக்காக பெனால்டி கார்னரைப் பெற்றுத் தந்தார். அதில் ஹார்திக் பந்து வழங்கப்பட்டபோது சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார். பின்னர் ஜுக்ராஜ் அடித்த ஷாட் மூலம் இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது.

இதையடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. இந்த முறை மாற்று உத்தியில், கோல் கீப்பரின் இடதுபுறம் நின்றிருந்த வீரரிடம் பந்து அனுப்பப்பட்டது. அந்தப் பந்து கோல் கீப்பருக்கு அருகில் கம்பத்தின் பக்கத்தில் நின்றிருந்த வீரரைத் தாக்கியதாகத் தெரிந்ததைத் தொடர்ந்து நடுவர் பெனால்டி ஸ்ட்ரோக் வழங்கினார். ஹார்திக் சிங் களமிறங்கி அதை கோலாக மாற்ற, இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் இந்தியா தனது கட்டுப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியது.

பதக்கப் பட்டியலில் 4வது இடதுக்கு முன்னேறிய இந்தியா:

நான்காவது காலிறுதியில் லக்ரா இந்தியாவின் முன்னிலையை நான்கு கோல்களாக உயர்த்தினார். இதனால் மலேசியா மீண்டும் போட்டிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றொரு டிராக் ஃப்ளிக் மூலம் தனது இரண்டாவது கோலை அடித்து, இந்தியாவின் முன்னிலையை 5-1 என உயர்த்தினார்.

மேலும் படிக்க: மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு தங்கம்: உலக சாம்பியனை வீழ்த்திய அமன் செஹ்ராவத்

நாகோயாவில் நடைபெற்ற இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற 21-வது தங்கப் பதக்கம் இதுவாகும். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் உஸ்பெகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்தியா நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

இந்த வெற்றி இந்திய ஹாக்கிக்கு ஒரு முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது. ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் இரண்டும் தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்புவது இதுவே முதல் முறையாகும்.

 

Follow Us