AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு

ACC Rising Star Asia Cup 2026 : ஏசிசி ரைசிங் ஸ்டார் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா 'ஏ' அணியும் பாகிஸ்தான் ஏ அணியும் நவம்பர் 22, 2026 இன்று மோதுகின்றன. இப்போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் நிலையில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 Nov 2026 15:30 PM IST

ஏசிசி ரைசிங் ஸ்டார் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா ‘ஏ’ (India A) அணியும் பாகிஸ்தான் ஏ அணியும் நவம்பர் 22, 2026 இன்று மோதுகின்றன. இப்போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் நிலையில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு

இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, ஆயுஷ் படோனி, திலக் வர்மா (கேப்டன்), குமார் குஷாக்ரா (கீப்பர்), ரின்கு சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஷாபாஸ் அகமது, விப்ராஜ் நிகாம், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதே போல பாகிஸ்தான் அணியில் ஷமில் ஹுசைன், மஸ் சதாகத், ரோஹைல் நசீர் (கீப்பர்), ஹசன் நவாஸ், அப்துல் சமத் (கேப்டன்), ஃபர்ஹான் யூசுப், சாத் மசூத், முகமது இம்ரான் ரந்தவா, அகமது டேனியல், சுஃப்யான் மோகிம், அலி ராசா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிக்க : Team India: டிரெஸ்ஸிங் ரூம் சர்ச்சை.. காம்பீர் ஆறுதல்.. மனவேதனையை பகிர்ந்த சர்பராஸ் கான்!

இத்தொடரில் இரு அணிகளும் தங்களது தொடக்கப் போட்டிகளில் வெற்றி பெற்றன. இந்தியா, நேபாளத்தை 306 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தை 61 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 3வது முறையாக மோதும் இந்தியா – பாகிஸ்தான்

இந்த மாதத்தில் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை சந்தித்துள்ளன,

அதில் பாகிஸ்தான் லீக் சுற்றில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா தனது தோல்விக்குப் பழிதீர்த்து ஒன்பதாவது முறையாகக் கோப்பையை வென்றது.

இ இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு பேசிய இந்திய ஏ அணியின் கேப்டன் திலக் வர்மா, தங்களது அணியும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியதாகக் கூறினார். ஆடுகளம் சற்று வறண்ட நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஹர்ஷித் மற்றும் பிரின்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாகப் பாராட்டிய திலக் வர்மா, காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு அவர்கள் இவ்வாறு பந்துவீசுவது வீரர்களுக்கும் அணிக்கும் முக்கியமானது என்றார். அவர்களது பந்துவீச்சைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : IPL 2026: பஞ்சாப் அணியில் ஹர்திக் ரோல் என்ன..? ரிக்கி பாண்டிங் ப்ளான் இதுதான்!

இந்தியா – பாகிஸ்தான் மோதல் தங்களுக்குப் பொறுத்தவரை மற்றொரு போட்டி மட்டுமே என்றாலும், ரசிகர்களுக்கு இது மிகவும் சுவாரஸ்யமான ஆட்டம் என்றும், இந்தப் போட்டியை அவர்கள் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்றும் திலக் வர்மா தெரிவித்தார். மேலும், முந்தைய போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இந்தியா ஏ களமிறங்குவதாகவும் கூறினார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் ஏ அணியின் கேப்டன் சமத் பேசுகையில், முதலில் பேட்டிங் செய்யவே தாங்கள் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆடுகளம் வறண்ட நிலையில் இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். தங்கள் அணியின் ஒவ்வொரு வீரரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட சமத், மாஸ் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இன்றைய போட்டி சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறினார். பாகிஸ்தான் ஏ அணியிலும் முந்தைய போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் தொடர்வதாக அவர் உறுதிப்படுத்தினார்.

Follow Us