IPL 2026: பஞ்சாப் அணியில் ஹர்திக் ரோல் என்ன..? ரிக்கி பாண்டிங் ப்ளான் இதுதான்!
Hardik Pandya Trade: இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கு மாறியுள்ளார். ஹர்திக்கின் வருகை பஞ்சாப் அணியை வலுவான 'ஆல்-ரவுண்டர்' படையாக மாற்றியுள்ளதாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, ஹர்திக் வரவிருக்கும் ஐபிஎல் 2027 சீசனில் (IPL 2027) பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார். ஹர்திக்கிற்குப் பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை அணியில் இணைந்துள்ளார். ஹர்திக் பஞ்சாப் அணிக்கு மாறுவதால் அணிக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் (Ricky Ponding) விளக்கமளித்துள்ளார்.
ஹர்திக்கின் வருகை அணியை ஒரு “ஆல்-ரவுண்டர்” அணியாக மாற்றியுள்ளது. டி20 போட்டிகளில் பந்துவீச்சாளராகவும் விளையாடக்கூடிய சில ஆல்-ரவுண்டர்களில் ஹர்திக்கும் ஒருவர். அவர் முழு 4 ஓவர்களும் பந்துவீசுவதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனைக் களமிறக்கும் நெகிழ்வுத்தன்மை அணிக்குக் கிடைக்கிறது என்று பாண்டிங் கூறினார்.
ALSO READ: பஞ்சாப் அணியில் ஹர்திக் பாண்ட்யா.. கேப்டன்ஷியில் மாற்றமா..?




ரிக்கி பாண்டிங் விளக்கம்:
ஜியோஸ்டாரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில், ” 2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மெகா ஏலத்திற்கு முன்பு, இந்த மூன்றாண்டு கால சுழற்சி முழுவதும் எங்கள் வீரர்களில் பெரும்பாலோர் ஒன்றாகவே இருப்பார்கள் என்பதை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். எனவே, ஐபிஎல் 2027-க்கு முன்னதாக 6 வீரர்களை விடுவிக்கவும், 19 வீரர்களைத் தக்கவைக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். பரிமாற்றத்தின் மூலம் ஹர்திக் பாண்ட்யா அணியில் சேர்க்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங்கை மற்றொரு அணிக்கு அனுப்பியுள்ளோம். இப்போது எங்களிடம் மிகவும் சமச்சீரான அணி உள்ளது.
எங்கள் அணியில் எத்தனை ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர் என்பது குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன. பாண்ட்யா வந்ததால், மார்கோ ஜான்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா உமர்சாய், (சூர்யான்ஷ்) ஷெட்ஜ், ஷஷாங்க் சிங் மற்றும் கூப்பர் கானலி உட்பட ஏற்கனவே எங்கள் அணியில் நிறைய ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். இருப்பினும், இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சாதகமாக இருக்கும். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் முதல் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் வரை, கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் எங்களிடம் வீரர்கள் உள்ளனர்.” என்று தெரிவித்தார்.
ALSO READ: தோனியின் நம்பர் 7 ஜெர்சி இனி இல்லை.. சிஎஸ்கே எடுத்த முக்கிய முடிவு.. ஏன் தெரியுமா?
ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் வாழ்க்கை
ஹர்திக் பாண்ட்யா தனது ஐபிஎல் வாழ்க்கையில் 162 போட்டிகளில் விளையாடியுள்ளார். 150 இன்னிங்ஸ்களில், ஹர்திக் பாண்ட்யா 10 அரைசதங்கள் உட்பட 2955 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 91 ஆகும். 116 இன்னிங்ஸ்களில் பந்துவீசிய ஹர்திக், 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் ஒரு போட்டியில் 36 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சுப் புள்ளிவிவரமாகும்.