AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் கொட்டப்போகும் மழை.. பிற மாவட்டங்களில் எப்படி? எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். ஆனால், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொட்டப்போகும் மழை.. பிற மாவட்டங்களில் எப்படி? எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Aug 2026 14:52 PM IST

ஆகஸ்ட் 17, 2026: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை:

அதேபோல, ஆகஸ்ட் 18ஆம் தேதியைப் பொறுத்தவரையில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!

ஆகஸ்ட் 19ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை தொடரும் மழை:

ஆகஸ்ட் 20ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழையும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கான வாய்ப்புகளும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுகவினரிடம் SORRY கேட்ட முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?.. முழு விவரம்!!

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது. எனினும், வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

Follow Us