ஜீ 5 ஓடிடியில் புதிய சாதனையைப் படைத்தது தளபதி விஜயின் ஜன நாயகன் படம்
Jananayagan has set a new record on ZEE5 OTT | தளபதி விஜயின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜன நாயகன். இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்தவர் நடிகர் தளபதி விஜய். இவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தமிழ் நாட்டில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் கட்சி தொடங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே இனி சினிமாவில் படங்களில் நடிக்க போவதில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் தனது நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் தான் இறுதிப் படம் என்று தெரிவித்து இருந்தார். அந்த விசயம் தளபதி விஜயின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் ஜன நாயகன் படத்தை கொண்டாட ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு பல தடங்கள்களை சந்தித்தது. அதிலும் சென்சார் சான்றிதழைப் பெருவதற்கு அந்தப் படக்குழுவினர் பெரும் போராட்டத்தை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல போராட்டங்களுக்கு பிறகு இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கிய இந்த ஜன நாயகன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




ஜீ 5 ஓடிடியில் புதிய சாதனையைப் படைத்தது தளபதி விஜயின் ஜன நாயகன்:
இந்தப் படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜீ 5 ஓடிடியில் ஜன நாயகன் படம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதன்படி ஜீ 5 நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, ஜன நாயகன் படம் இதுவரை 500 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது என்றும் இதுதான் இந்த நிறுவனத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்றப் படம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… அந்தப் படத்தில் நடிக்கும் போது மிகவும் பயமாக இருந்தது – நடிகை அமலா பால்
ஜீ 5 ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Different languages, one massive Thalapathy wave. Jana Nayagan continues to reach audiences far and wide. 🔥#JanaNayagan – Watch Now only on Zee 5@actorvijay @iambobbydeol @hegdepooja @mamitha_baiju#Zee5India #ThalapathyVijay #BobbyDeol #PoojaHegde pic.twitter.com/zbabrbm5cM
— Zee 5 (@Zee5_Official) October 3, 2026
Also Read… அடுத்தப் படம் நேரடி ஓடிடி ரிலீஸ் தான் – கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்