AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடுத்தப் படம் நேரடி ஓடிடி ரிலீஸ் தான் – கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்

Director Karthik Subbaraj | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் சமீபத்தில் டோரதி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அடுத்தப் படம் நேரடி ஓடிடி ரிலீஸ் தான் – கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்
கார்த்திக் சுப்பராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Oct 2026 08:32 AM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டோரதி. இந்தப் படம் ஆனாக பிறந்து திருநங்கையாக மாறுபவர்களை இந்த சமூகம் எப்படி எல்லாம் அணுகுகிறது என்பது குறித்து படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் கனடாவில் நடைப்பெற்ற டொரொண்டோ திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்ட போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் டோரதி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அளித்தப் பேட்டி ஒன்றில் அடுத்ததாக அவர் இயக்க உள்ள படம் குறித்து பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அடுத்தப் படம் நேரடி ஓடிடி ரிலீஸ் தான் – கார்த்திக் சுப்பராஜ்:

அடுத்ததாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்காக பிரபு தேவா, அதர்வா மற்றும் உபேந்திரா சார் ஆகியோர் நடிக்கும் நேரடி ஓடிடி திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இதன் படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை ஏற்கனவே முடித்துவிட்டோம்; அடுத்த கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளது.

தற்போது நான் பணியாற்றி வரும் திரைக்கதை ‘புலியாட்டம்’ கலையை மையமாகக் கொண்டது. காட்சி ரீதியாகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையிலான படம் இது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால், ஒரு பிரம்மாண்டமான காட்சி விருந்தாக அமைந்திருக்கும். இருப்பினும், இத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இதில் இணைந்துள்ளது. ஒரு நாவலுக்கான உரிமையை நான் பெற்றுள்ளேன்; அதைத் திரைப்படமாக மாற்றும் வகையில் அதில் எனது சொந்தக் கற்பனையில் சில அம்சங்களையும் சேர்த்துள்ளேன்.

Also Read… இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொன்ன விமர்சனம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கேங்ஸ்டரா மக்கள் மனதில் இடம் பிடித்தாரா விஜய் சேதுபதி? பத்தா படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ!

Follow Us