AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் அந்தப் படத்திலிருந்து சூர்யா சாரின் மிகப் பெரிய ரசிகன் – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

Karthik Subbaraj talks about Suriya | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தான் எப்போது இருந்து நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகராக மாறினேன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நான் அந்தப் படத்திலிருந்து சூர்யா சாரின் மிகப் பெரிய ரசிகன் – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
சூரியா - கார்த்திக் சுப்பராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jun 2026 17:31 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது தயாரிப்பாளராகவும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். தமிழ் சினிமாவில் வெளியான பீட்சா என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் முதலாவதாக வெளியான பீட்சா படமே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் அதனைத் தொடர்ந்து வெளியான அடுத்தடுத்தப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், சூர்யா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து படம் இயக்கி உள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவர்களின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இயக்குநராக இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. கடந்த 2025-ம் ஆண்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா குறித்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நந்தா படத்தில் இருந்து நான் சூர்யா சாரின் மிகப்பெரிய ரசிகன்:

‘நந்தா’, ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களின் காலத்திலிருந்தே நான் சூர்யா சாரின் தீவிர ரசிகன்; ஒரு நடிகராக அவர் மிகச் சிறப்பானவர். முதலில் நான் அவரிடம் ஒரு வேறுபட்ட கதையைச் சொன்னேன். அது மிகப்பிரம்மாண்டமான ஒரு திட்டமாக இருந்தது. அவருக்கும் அந்தக் கதை பிடித்திருந்தது, ஆனால் அவருக்கு வேறு சில பணி இருந்தன. அந்தப் படத்தை உருவாக்க நீண்ட காலம் ஆகும் என்பதால் அதைச் செய்ய முடியாது என்று அவர் பின்னர் கூறினார்.

பிறகு அவர் என்னிடம் வேறொரு யோசனையைக் கேட்டார். அப்போதுதான் நான் ரெட்ரோ கதையைச் சொன்னேன். சூர்யா சார் தனது வசீகரமான தோற்றத்திற்கும் புன்னகைக்கும் பெயர் பெற்றவர். ஆனால் இந்தக் கதாபாத்திரமோ ஒருபோதும் சிரிக்கவே கூடாது. அந்தச் சவால் அவருக்குப் பிடித்திருந்தது. படம் முடிந்த பிறகும், எங்களுக்கிடையிலான அந்தச் சகோதரத்துவப் பிணைப்பு இப்போதும் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Also Read… Rajinikanth: ரஜினிகாந்தின் பெயரை எந்த அமைப்பு பயன்படுத்தக்கூடாது – ரசிகர் மன்றம் அறிவிப்பு!

இணையத்தில் வைரலாகும் கார்த்திக் சுப்பராஜ் பேச்சு:

Also Read… Malavika Mohanan: அழகான ஒட்டகச் சிவிங்கியே..! பாக்கெட் நாவல் பட ஷூட்டிங் போட்டோவை பகிர்ந்த மாளவிகா மோகனன்!

Follow Us