Malavika Mohanan: அழகான ஒட்டகச் சிவிங்கியே..! பாக்கெட் நாவல் பட ஷூட்டிங் போட்டோவை பகிர்ந்த மாளவிகா மோகனன்!
Malavika Mohanan X Post : தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக மிகவும் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராராவின் இயக்கத்தில் பாக்கெட் நாவல் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கில் இயக்குநருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மலையாளம் சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருபவர் நடிகை மாகாவிகா மோகனன் (Malavika Mohanan). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி ராஜா சாப் (The Raja saab). இப்படத்தில் இவர் நடிகர் பிரபாஸிற்கு (Prabhas) ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் மொத்தம் 3 நடிகைகள் நடித்திருந்த நிலையில், பைரவி என்ற வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து தமிழில் இவர் சர்தார் 2 (Sardar 2) என்ற படத்திலும் கார்த்தியுடன் (Karthi) இணைந்து நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், இவர் புதிதாக இணைந்துள்ள தமிழ் படம்தான் பாக்கெட் நாவல் (Pocket Novel).
இப்படத்தை சூப்பர் டீலக்ஸ் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா (Thiagarajan Kumararaja) இயக்கிவரும் நிலையில், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கதாநாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தில் நடிகை மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடித்துவரும் நிலையில், இப்பட ஷூட்டிங்கின்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுடன் எடுத்த மிரர் போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: நூறு சாமி படத்திற்காக சசி கொடுத்த அர்ப்பணிப்பை நான் மிகவும் மதிக்கிறேன் – இயக்குநர் வெற்றிமாறன்!
இயக்குநர் தியாகராஜா குமாரராஜனுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்த மாளவிகா மோகனன்:
#PocketNovel 🎥 #ThiagarajanKumararaja pic.twitter.com/6zuhfWDyRr
— Malavika Mohanan (@MalavikaM_) June 13, 2026
நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். மேலும் இவர் சில இந்தி படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். அந்த வரிசையில் தமிழில் இவரின் நடிப்பில் பாக்கெட் நாவல் என்ற படமான்ஸ் சிறப்பாக தயாராகிவருகிறது. இதன் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் இப்படமானது தயாராகிவருகிறதாம்.
இதையும் படிங்க: ரஜினிகாந்தின் பெயரை எந்த அமைப்பு பயன்படுத்தக்கூடாது – ரசிகர் மன்றம் அறிவிப்பு!
இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பு வேடம் ஒன்றில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் பாடல்களும் சிறப்பாகவே உருவாகிவருகிறதாம். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் முதல்கட்டதை கடந்த நிலையில், தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்றுவருகிறதாம். இப்படத்தை 2026ம் ஆண்டு இறுதியில் அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.