AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பைக் ரேஸால் வந்த வினை.. டிராக்டரில் மோதி தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு.. பகீர் சிசிடிவி காட்சிகள்!!

பைக் ரேஸால் வந்த வினை.. டிராக்டரில் மோதி தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு.. பகீர் சிசிடிவி காட்சிகள்!!

Vinoth V
Vinoth V | Published: 31 Jul 2026 14:06 PM IST

திருப்பத்தூர் அருகே நண்பர்களுடன் ரேஸில் ஈடுபட்ட வாலிபர், கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் டிரெய்லரில் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர், ஜூலை 31: நண்பர்களுடன் அதிவேகமாகப் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர், எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த டிராக்டர் டிரெய்லரில் மோதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இக்கடூர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் கார்த்திக் (26). இவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கார்த்திக் தனது R15 ரக இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, அவருக்குக் கூப்பிடு தூரத்தில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவரது நண்பர்கள் இருவர் வந்துகொண்டிருந்தனர்.

Follow Us