இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாளத்திற்கு எடுத்துச் செல்வதற்கான விதிமுறைகளை அந்நாட்டு மத்திய வங்கியான நேபாள ராஷ்டிர வங்கி தளர்த்தியுள்ளது. அதன்படி, நவம்பர் 9, 2016க்குப் பிறகு வெளியிடப்பட்ட 200 மற்றும் 500 நோட்டுகளை இந்தியர்கள் மற்றும் நேபாளர்கள் தலா 25,000 வரையிலான மதிப்பில் எடுத்துச் செல்லலாம். அதேநேரத்தில், நவம்பர் 9, 2016க்கு முன்பு வெளியிடப்பட்ட 500 மற்றும் 1,000 நோட்டுகளுக்கு நேபாளத்தில் தொடர்ந்து தடை நீடிக்கிறது. முன்னதாக, 100க்கு மேற்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாளத்திற்கு எடுத்துச் செல்லத் தடை இருந்தது.