மாணவர் போராட்டம் தொடர்பாக வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், மலையாள நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான பேர்லே மானி விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார். யூடியூபில் வெளியிட்ட 21 நிமிட வீடியோவில், தனது பதிவின் கருத்தை விளக்கிய பேர்லே, "எனது வார்த்தைகளால் சிலர் காயமடைந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்" என தெரிவித்தார்.