நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு மீண்டும் எழுந்துள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ரசிகர் மன்றங்கள் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. தனுஷ் ரசிகர்கள் ரத்ததான முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.