Rajinikanth: ரஜினிகாந்தின் பெயரை எந்த அமைப்பு பயன்படுத்தக்கூடாது – ரசிகர் மன்றம் அறிவிப்பு!
Rajinikanth Issues Strict Warning: தென்னிந்திய மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக மிகவும் பிரபலமானவர் ரஜினிகாந்த். இந்நிலையில் இவரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ இனி எந்த அமைப்பு மற்றும் கட்சியும் பயன்படுத்த கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஜினியின் அனுமதிக்கு பிறகே வெளியாகியுள்ளது என கூறப்படுகிறது.
கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (SuperStar Rajinikanth). இவர் தொடர்ந்து தமிழில் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக கூலி (Coolie) என்ற படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Director Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் இவர் இணைந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த தனக்கான காட்சிகளை முடித்ததாக கூறப்படும் நிலையில், இன்னும் சில காட்சியில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் இதற்கான ஷூட்டிங் நடைபெற்றுதான் வருகிறதாம். அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 13ம் தேதியில், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர்மன்றத்தின் தரப்பில் (All India Rajinikanth Fan Club) பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை எந்த கட்சியும் மற்றும் அமைப்பும் பயன்படுத்த கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பான் ரஜினிகாந்தி ஒப்புதலுக்கு பிறகே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: 18 ஆண்டுகளை நிறைவு செய்தது தசாவதாரம் படம் – கொண்டாடும் ரசிகர்கள்
அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர்கள் மற்றம் வெளியிட்ட அறிவிப்பு குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
#SuperstarRajinikanth fans welfare association issues a circular banning the use of his Superstar’s name or photo by political parties and organisations.#Superstarrajinikanth@rajinikanth @ash_rajinikanth @soundaryaarajni pic.twitter.com/0W0ZXrIWEC
— RIAZ K AHMED (@RIAZtheboss) June 13, 2026
இந்த அறிவிப்பில், “அன்பு தலைவர் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்த கூடாது என தலைவரின் உத்தரவுபடி ரசிகர்கள் மற்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களும் இதை தெரிவித்துக்கொள்வதாக” அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: அஜய் ஞானமுத்துவுடன் புது படத்தில் கைகோர்க்கும் ராகவா லாரன்ஸ்?
மக்களுக்கான புதிய அமைப்பை தொடங்கிய லதா ரஜினிகாந்த்:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கவுள்ளதாக ஆரம்பத்தில் அறிவித்த நிலையில், அதையடுத்து பின் அரசியலில் தான் இறங்கப்போவதில்லை என கூறிவிட்டார். இதையடுத்து இவர் வேறொரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் இவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தற்போது மக்களுக்காக ஒரு புதிய அமைப்பை தொடங்கியுள்ளாராம். இது மக்களுக்காக போராடும் அமைப்பு என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது பெயரையோ அல்லது புகைப்படங்களையோ எந்த கட்சியும் மற்றும் அமைப்பும் பயன்படுத்த கூடாது என தனது ரசிகர்கள் மன்றம் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.