AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

18 ஆண்டுகளை நிறைவு செய்தது தசாவதாரம் படம் – கொண்டாடும் ரசிகர்கள்

18 Years Of Dasavathaaram Movie | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தசாவதாரம். இந்தப் படம் தற்போது 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

18 ஆண்டுகளை நிறைவு செய்தது தசாவதாரம் படம் – கொண்டாடும் ரசிகர்கள்
தசாவதாரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Jun 2026 16:05 PM IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி நாயகனாக உருவெடுத்தவர் நடிகர் கமல் ஹாசன். தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்கள் நடித்து வந்த இவர் சினிமாவில் உலக தரம் வாய்ந்த பல விசயங்களை அறிமுகம் செய்து வைத்தார். இதன் காரணமாகவே ரசிகர்கள் அவரை உலக நாயகன் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். தொடர்ந்து அவரது படங்களில் பல விசயங்களை செய்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். அந்த வரிசையில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தசாவதாரம்.

நடிகர் கமல் ஹாசன் எழுதி நாயகனாக நடித்த இந்தப் படம் கடந்த 13-ம் தேதி ஜூன் மாதம் 2008-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். இந்த தசாவதாரம் படத்தில் நடிகர் கமல் ஹாசன் 10 வெவ்வேரான வேடங்களில் நடித்து மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

18 ஆண்டுகளை நிறைவு செய்தது தசாவதாரம் படம்:

இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் மொத்தம் 10 வேடங்களில் நடித்து இருப்பார். அதற்காக அவர் எவ்வளவு மெனக்கெடல்களை செய்தார் என்பதற்கான வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைப் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… Jiiva: கிடா பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் ஜீவா – வெளியான அறிவிப்பு இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சியான் 63 படத்தில் இணைந்த கோமாளி பட நடிகை – வைரலாகு போட்டோ

Follow Us